இந்திய அரசு பரிசாக வழங்கிய ஹெலிகாப்டரை கைப்பற்றிய தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வந்த சூழலில் தலிபான்கள் அந்நாட்டில் பல்வேறு இடங்களை கைப்பற்றி வருகின்றனர்.

Update: 2021-08-12 12:18 GMT

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய அரசு பரிசாக வழங்கிய தாக்குதல் ஹெலிகாப்டரை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வந்த சூழலில் தலிபான்கள் அந்நாட்டில் பல்வேறு இடங்களை கைப்பற்றி வருகின்றனர்.


தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆப்கன் ராணுவம் திணறி வருகிறது. இதனிடையே கடந்த 2019ம் ஆண்டு ஆப்கான் ராணுவத்திற்கு இந்தியா சார்பில் எம்ஐ 24 ரக போர் ஹெலிகாப்டரை வழங்கியது. தற்போது அதனை தலிபான்கள் கைப்பற்றியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த ஹெலிகாப்டர் கண்டூஸ் மாநிலத்தில் கைப்பற்றியுள்ளனர். அங்கு மேலும் ராணுவ வாகனங்கள் மற்றும் கவச வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர். தினமும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அட்டூழியங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Source: Dinakaran

Image Courtesy:thehill.com

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=697413

Tags:    

Similar News