தாலிபான்களை எதிர்க்கும் ஆப்கானிஸ்தான் பொதுமக்கள்-வலுக்கும் போராட்டம் !

ஆயுதம் ஏந்திய தாலிபானிகள் கறுப்பு உடையணிந்து ஆயுதம் இல்லாத கூட்டத்தை நோக்கி முன்னேறி செல்வதை அந்த வீடியோவில் காண முடிகிறது.

Update: 2021-08-18 13:30 GMT

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிர்ப்பைக் காட்டும் விதமாக உள்ளூர்வாசிகள் ஜலாலாபாத்தில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அப்போது அவர்கள் தாலிபான் கொடியை நீக்கிவிட்டு ஆப்கானிஸ்தானின் மூவர்ணக் கொடியை அசைத்துக் காட்டியதால் அவர்களை தாலிபான்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக பொதுமக்கள் பொது இடங்களில் கூடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அப்போது சிலர் ஆப்கானிஸ்தானின் மூவர்ண கொடியை ஏந்தியவாறு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை கட்டுப்படுத்துவதற்காக தாலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பத்து பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆயுதம் ஏந்திய தாலிபானிகள் கறுப்பு உடையணிந்து ஆயுதம் இல்லாத கூட்டத்தை நோக்கி முன்னேறி செல்வதை அந்த வீடியோவில் காண முடிகிறது.

இதே போல் மற்றொரு வீடியோவில், ஆப்கானிஸ்தான் மக்கள் தாலிபான்களின் கொடியை அகற்றிவிட்டு ஆப்கானிஸ்தானின் மூவர்ணக் கொடியை ஏற்றியதால் அங்கும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மற்றொரு வீடியோவில் பொதுமக்கள் ஒன்று கூடி தாலிபான்களுக்கு எதிராக கோஷமிடும் சம்பவமும் நடந்ததைக் காண முடிகிறது .

தலிபான்கள் தங்களை மிதவாதிகளைப் போல் காட்டிக்கொள்ள முயற்சித்தாலும், ஜிகாதி அமைப்பு பேட்டிகள், அறிக்கைகள் மற்றும் செய்தியாளர் சந்திப்பின் போது அவர்கள் அளித்த வாக்குறுதிகளை வெளிப்படையாக மீறி வருகின்றனர். புதன்கிழமை அன்று பர்தா அணியாததால் ஒரு பெண்ணை தாலிபான்கள் சுட்டுக் கொன்றதாக செய்திகள் வெளியாகின. இதே போல் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிக்க முயன்ற மக்கள் மீது விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தற்போது தேசியக் கொடியை மாற்ற வேண்டும் என்ற தாலிபான்களின் முயற்சி ஆப்கானிஸ்தான் மக்களின் போராட்டத்திற்கு வழிவகுத்ததாகவும் ஆயுதமேந்திய ஒரு ஜிஹாதி அமைப்பை எதிர்த்து ஆப்கானிஸ்தான் குடிமக்கள் போராடி வருவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Source : Opindia

Tags:    

Similar News