இனியும் மக்கள் தி.மு.க-வை நம்ப தயாரில்லை - இடைத்தேர்தல் முடிவில் காட்டப்பட்ட அறிகுறி.? சல்லி சல்லியாக சரிந்த ஸ்டாலின் மணல் கோட்டை!

இனியும் மக்கள் தி.மு.க-வை நம்ப தயாரில்லை - இடைத்தேர்தல் முடிவில் காட்டப்பட்ட அறிகுறி.? சல்லி சல்லியாக சரிந்த ஸ்டாலின் மணல் கோட்டை!

Update: 2019-10-24 09:07 GMT

தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தொடர்ந்து அதிமுக முன்னிலை வகிப்பதால், திமுக வசம் இருந்த அந்த தொகுதிகளை அதிமுக கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் 2016இல் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. தற்போது அந்த தொகுதிகளில் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.


தற்போதுவரை நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். இதில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் 113,428 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக தொடர்ந்து பின்னடைவு சந்தித்துள்ளது. இதன் காரணமாக, திமுக வசம் இருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளை அதிமுக கைப்பற்றுகிறது.


நாங்குநேரி தொகுதியில் 18 வது சுற்று நிலவரப்படி அதிமுக வேட்பாளர் நாராயணன் 81,569 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் மனோகரனை விட 27,000 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். திமுக பொருளாளர் துரைமுருகன் இந்த இடைத்தேர்தலை 2021 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு முன்னோட்டம் என கூறி இருந்த நிலையில் இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி கனியை தனதாக்கி கொண்டுள்ளது திமுகவிற்கு பலத்த அடியாக மாறியுள்ளது.



Similar News