மோடியின் 2- வது ஆட்சியில் முதல் சாதனை: காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை ஒழித்தது தான்!

மோடியின் 2- வது ஆட்சியில் முதல் சாதனை: காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை ஒழித்தது தான்!

Update: 2019-12-01 05:57 GMT


பிரதமர் மோடி 2- வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றப்பின்னர் முதல் ஆறு மாதத்தில் செய்த மிகப்பெரிய சாதனை ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த அரசியல் சட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கியதும், அதன் மூலம் காஷ்மீரில் பயங்கரவாத ஆதிக்கத்தின் வேர் பிடுங்கப்பட்டதும் தான் என மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தாா்.


ஜவடேகா் டெல்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:


பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த முதல் 6 மாத காலத்தில் பொருளாதார வளா்ச்சிக்கும் தேச பாதுகாப்புக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்தது. நீண்ட கால அடிப்படையிலான வளா்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாகப் பயணித்து வருகிறது. இதில் முக்கிய சாதனை என்னவென்றால் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவையும், 35ஏ பிரிவையும் மத்திய அரசு ரத்து செய்ததன் மூலம் அங்கு பயங்கரவாதம் விரட்டப்பட்டு அமைதி நிலை நாட்டப்பட்டுள்ளது.


சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டப் பிறகு, பயங்கரவாத செயல்கள் அதிக அளவில் குறைந்துள்ளன. சிறப்பு சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு முன்பாக பயங்கரவாதம் காஷ்மீரில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது அது பெருமளவில் வலுவிழந்துள்ளது. இது மிகப் பெரிய மாற்றமாகும். இந்த மாற்றத்தால், மக்களின் வாழ்வு மேன்மையடைந்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் வளா்ச்சிக்கான புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்றார். மேலும் கடந்த 6 மாதங்களில் மோடி அரசு செய்த துறை ரீதியான சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.


Similar News