இந்திய அரசு அனுப்பிய கொரோனா தடுப்பூசி ஆப்கானிஸ்தான் சென்றடைந்தது.!

இந்திய அரசு அனுப்பிய கொரோனா தடுப்பூசி ஆப்கானிஸ்தான் சென்றடைந்தது.!

Update: 2021-02-07 13:56 GMT

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி உலக அளவில் நல்ல வறவேற்பை பெற்றுள்ளது. கோவெக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் இந்தியா முழுவதும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த 2 தடுப்பு மருந்துகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் மத்திய அரசு இந்த தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2 தடுப்பு மருந்துகளுக்கும் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் தடுப்பூசி கேட்டு இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகளுக்கு இந்திய அரசு வழங்கி வருகிறது.

இதன்படி பூடான், மாலத்தீவு நேபாளம், வங்காளதேசம், மியான்மர், மொரிசியஸ், சீஷெல்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இலவசமாக தடுப்பு மருந்தை முதற்கட்டமாக இந்திய அரசு அனுப்பி வைத்தது. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இன்று 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டது. மும்பையில் இருந்து சென்ற ஏர் இந்தியா விமானம் காபூல் நகருக்கு சென்றடைந்தது.

விமான நிலையத்தில் இந்திய அரசு அதிகாரிகள் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளிடம் மருந்துகளை ஒப்படைத்தனர். அவர்கள் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
 

Similar News