உதயநிதியின் வழியில், சசிகலா குறித்து மீண்டும் அதே ஆபாச கருத்து! இம்முறை ஆர்.எஸ்.பாரதி!

சசிகலா குறித்து அறுவறுக்கத்தக்க வகையில் பேசியுள்ளார் தி.மு.க-வின் அமைப்பு செயலாளர், ஆர்.எஸ். பாரதி. அதன் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ;

Update: 2021-02-10 07:58 GMT

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் சசிகலா குறித்தும் அறுவறுக்கத்தக்க வகையில் பேசியுள்ளார் தி.மு.க-வின் அமைப்பு செயலாளர், ஆர்.எஸ். பாரதி. அதன் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற தி.மு.க கூட்டம் ஒன்றில் தி.மு.க-வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியுள்ளார். அவர் பேசியதன் காணொளி ரெட் பிக்ஸ் 24*7 யூடுயூப் சேனலில் நேற்று இரவு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவரின் பேச்சு மிகவும் அறுவறுக்கத்தக்க வகையில் அமைந்துள்ளதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். 

அவர் பேசுகையில், "அண்மையில் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் நினைவு மண்டபத்தை திறந்தார்கள். தமிழகம் முழுவதிலும் இருந்து பஸ் ஒன்றிற்கு 40,000 ரூபாய் என்று கொடுத்தார்கள். பஸ்ஸில் ஏறுபவர்களுக்கு 2,000 ரூபாய் கொடுத்தார்கள். பஸ் ஓசி, 2,000 ரூபாய் கைச்செலவு, குவாட்டர், பிரியாணி என்று கொடுத்து 40 பேர் வரவேண்டிய பஸ்ஸில் 20 பேர் தான் வந்தார்கள். தமிழகம் முழுக்க ஆட்களை பஸ்ஸில் அழைத்து கொண்டு வந்து மெரினா கடற்கரையில் இறக்கினார்கள். வந்த கூட்டம் முழுவதும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரும் என்று எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் நினைத்தார்கள். இந்த மூதேவி முகத்தை பார்ப்பதை விட, கலைஞரோட நினைவிடத்திற்கு போவோம் என்று சொல்லி, அனைவரும் அங்கே சென்றார்கள்", என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "எம்.ஜி.ஆருக்கு பிறகு, ஆர்.எம். வீரப்பனையா முதல்வர் ஆக்கினீர்கள்? இல்லையே. அவரின் மனைவி ஜானகியை தானே முதல்வர் ஆக்கினீர்கள். அதற்கு பிறகு 25 ஆண்டு காலம் திரையில் எம்.ஜி.ஆருக்கு மனைவியாக நடித்த ஜெயலலிதா-வை தானே முதல்வர் ஆக்கினீர்கள். முதலில் மனைவி, பிறகு மனைவியாக திரையில் நடித்தவர். பண்ருட்டி ராமச்சந்திரனை கொண்டு வர முடிந்ததா? ஆர்.எம். வீரப்பனை கொண்டு வர முடிந்ததா? எங்களை பார்த்து வாரிசு அரசியல் என்று பேசுகிறீர்களே, உங்களுக்கு வாரிசு இல்லை என்றால் அதற்கு நாங்களா ஏற்பாடு செய்து கொடுக்க முடியும்?", என்று பேசினார்.  

Full View

இதற்கு முன்னர், உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் பொழிந்த அதே ஆபாச அர்ச்சனையை ஆர்.எஸ். பாரதியும் பேசியுள்ளார். "உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நீ அந்த அம்மையாரின் காலில் விழுந்து தானே முதல்வராக வந்தாய் என்று கூறினார். ஆனால் அதற்கு உதயநிதி மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, டேபிளுக்கு உள்ள இரண்டு கால்களுக்கு நடுவில் புகுந்து, அந்த அம்மாவின் இரண்டு கால்களுக்கு கீழே விழுந்து கும்பிட்டார்", என்று பேசியுள்ளார். 

இதன் காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த பேச்சு அறுவறுக்கத்தக்க வகையில் இருப்பதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். 


தி.மு.க-வினர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட பெண் அரசியல்வாதிகள் குறித்து ஆபாசமாக பேசுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, பிரச்சாரம் ஒன்றில் பேசிய உதயநிதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறாக பேசியதாக ஒரு காணொலி காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. அதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

பிறகு, வழக்கறிஞர் ராஜலட்சுமி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் பெண்கள் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த புகார் மனுவை ஏற்றுக்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News