இதுதாங்க மோடி! மகிழ்ச்சியாக இருங்கள் மோடியின் ட்வீட்!
இதுதாங்க மோடி! மகிழ்ச்சியாக இருங்கள் மோடியின் ட்வீட்!
இன்று காலை 8.07 மணிக்கு சூரிய கிரகணம் ஆரம்பித்து பகல் 11.19 மணி இருந்தது. இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களை போல், சூரிய கிரகணத்தை பார்க்க நானும் ஆர்வமாக இருந்தேன். எதிர்பாராதவிதமாக, மேகமூட்டம் காரணமாக சூரியனை பார்க்க முடியவில்லை. ஆனால், கோழிக்கோடு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் தெரிந்த சூரிய கிரகணத்தை நேரலையில் பார்த்தேன். நிபுணர்களுடன் கலந்துரையாடி, சூரிய கிரகணம் பற்றி மேலும் தெரிந்து கொண்டேன் எனக்கூறியிருந்தார்.
இந்த ட்வீட்டில் அவர் சில புகைப்படங்களையும் பகிர்ந்தார் இது சமூக வலைதளத்தில் வைரலானது.
இதனையடுத்து , பிரதமர் மோடி வெளியிட்ட புகைப்படங்கள் மீம்ஸாக வலம் வருகிறது என டுவிட்டரில் நரேந்திர மோடியை டேக் செய்து ஒருவர் பதிவிட்டார் அந்த நபர் பதிந்த டீவீட்டை மேற்கோள் காட்டி, டுவிட்டரில் மோடி , மீம்சை மிகவும் வரவேற்கிறேன். மகிழ்ச்சியாக இருங்கள் எனக்கூறியுள்ளார்.
இது தற்போது வைரலாகி வருகிறது.
தன்னை பற்றி விமர்சனம் செய்து அதில் மகிழ்ச்சியாக இருந்தால் மகிழுங்கள் என கூறியுள்ளது அவரின் குணத்தை காட்டுகிறது. இதுதாங்க மோடி