திருப்தி தேசாய் கேரளாவுக்கு வந்திருப்பதால் பெரும் பரபரப்பு, சபரிமலை செல்ல இருப்பதாக பேட்டி

திருப்தி தேசாய் கேரளாவுக்கு வந்திருப்பதால் பெரும் பரபரப்பு, சபரிமலை செல்ல இருப்பதாக பேட்டி

Update: 2019-11-26 04:55 GMT

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் மண்டல பூஜை மகரவிளக்கு பூஜைக்காக நடை கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.  டிசம்பர் 27-ஆம் தேதி வரை மண்டல பூஜை நடைபெறும், அதற்கு அடுத்து மகரஜோதி பூஜை நடைபெறும். இதற்கிடையே கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் பெண்கள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் தரிசிக்கலாம் என தீர்ப்பளித்தது. கடந்த ஆண்டு பலரும்  மறுசீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையே கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர்கள் ஏழு பேர் கொண்ட  விசாரணைக்கு உத்தர விட்டனர்.



இதற்கிடையே பெண்கள் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்,  இன்று கொச்சின் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இன்று நாங்கள் சபரிமலை செல்ல இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மாநில அரசோ போலீசாரோ எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தாலும் சரி, கொடுக்கா விட்டாலும் சரி, நாங்கள் இன்று சபரிமலை செல்ல இருக்கிறோம் என்று தீப்தி தேசாய் தெரிவித்துள்ளார். இவர் வந்திருப்பதை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு இதே போல சபரிமலை கோயிலுக்கு நான் செல்லப் போகிறேன் என்று தெரிவித்து வந்திருந்த திருப்தி தேசாய் விமான நிலையத்தில் வெளியே வரவிடாமல் பக்தர்கள் பஜனைகள் செய்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்ததால்  வெளியே வர முடியாமல் அப்படியே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.


Similar News