இந்தியா ஜி -20 தலைமை பொறுப்பு ஏற்றதை முன்னிட்டு விளக்கொளியில் ஜொலிக்கும் பாரம்பரிய சின்னங்கள்

இந்தியா ஜி-20 தலைமை பொறுப்பு ஏற்றதை முன்னிட்டு விளக்கொளியில் ஜொலிக்கும் பாரம்பரிய சின்னங்கள் பற்றிய தகவல்களை காண்போம்.

Update: 2022-12-02 13:45 GMT

ஜி - 20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா நேற்று ஏற்றத்தை ஒட்டி இந்திய தொல்துறை கட்டுப்பாட்டில் உள்ள 100 பாரம்பரியச்சின்னங்கள் நேற்று விளக்கொளியில் ஜொலித்தன. ஏழாம் தேதி வரை அவற்றை விளக்கொளியில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்த சின்னங்களில் ஜி-20 அடையாளச் சின்னமும் வைக்கப்பட்டுள்ளது.


ஹுமாயூன் கல்லறை,கோனார்க் சூரியனார் கோவில்,ஷெர்ஷா சூரி  கல்லறை உள்ளிட்டவை அந்த பாரம்பரிய சின்னங்களில் அடங்கும். இதுபோல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்ன அந்தஸ்து பெற்ற 40 கலாச்சார இயற்கை தளங்களும் விளக்கொளியில் ஜொலித்தன.





 


Similar News