ரமலான் மாதம் தொடக்கம்: முஸ்லிம் சமுதாயத்தினருக்கு மத்திய அமைச்சர் நக்வி உருக்கமான வேண்டுகோள்.!

ரமலான் மாதம் தொடக்கம்: முஸ்லிம் சமுதாயத்தினருக்கு மத்திய அமைச்சர் நக்வி உருக்கமான வேண்டுகோள்.!

Update: 2020-04-13 12:54 GMT

ஊரடங்கு நாடு முழுவதும் தொடர்கின்ற நிலையில் புனித ரமலான் மாதம் விரைவில் தொடங்குகிறது. இந்த நிலையில் மசூதிகளுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி இஸ்லாமியர்களை வலியுறுத்தி கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ''புனித ரமலான் மாதம் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்குகிறது. கரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் முஸ்லிம் மக்கள் மசூதிகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் இருந்தபடியே தொழுகை நடத்த வேண்டும். அதுபோலவே பொது இடங்களில் கூட்டுத்தொழுகை எதிலும் ஈடுபட வேண்டாம். ''சமூக நலன் மற்றும் நாட்டு நலன் கருதி அனைத்து முஸ்லிம்களும் இதை கடைபிடிக்க வேண்டும் என அவர் உருக்கமுடன் வேண்டிக் கொள்கிறார்.

Similar News