UP : ஜான்பூரில் தலித் வீடுகளுக்கு தீ வைப்பு - சமாஜ்வாடி கட்சித் தலைவர் மற்றும் 34 பேர் NSA வின் கீழ் கைது; யோகி அதிரடி.! #UP #Yogi #Dalits

UP : ஜான்பூரில் தலித் வீடுகளுக்கு தீ வைப்பு - சமாஜ்வாடி கட்சித் தலைவர் மற்றும் 34 பேர் NSA வின் கீழ் கைது; யோகி அதிரடி.! #UP #Yogi #Dalits

Update: 2020-06-12 02:38 GMT

ஜான்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் தலித்துகளின் வீடுகளுக்கு தீ வைத்ததாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் ஜாவேத் சித்திகி மற்றும் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சுமத்துமாறு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 



மோதலுக்கான காரணம்

தகவல்களின்படி, படேதி கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் எருமையை ஒரு குளத்திற்கு அருகிலுள்ள வயலில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றனர், அங்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். ஆடு மீது எருமை மோதியதாகக் கூறப்படுகிறது, இது குழந்தைகளுக்குள் ஒரு சிறிய சண்டைக்கு வழிவகுத்தது.

குழந்தைகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்று சண்டையை பெற்றோரிடம் விவரித்தனர். இதன் விளைவாக, முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குச்சிகள் மற்றும் கம்பிகளைத் தூக்கிக் கொண்டு தலித் பகுதிக்குச் சென்றனர். அந்த கைகலப்பில் நபிப், லாரெப் மற்றும் ஹபீப் ஆகிய மூன்று பேர் காயமடைந்தனர். அதே நேரத்தில், கிராமத் தலைவரின் கணவரான அப்தாப் சண்டையைத் தீர்க்க வந்தார்.

இரவு 8 மணியளவில், மற்ற கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100 பேர் மீண்டும் தலித்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதில் ரவி, அதுல் மற்றும் பவன் ஆகிய மூன்று தலித் ஆண்கள் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் வீடுகளை எரிக்கத் தொடங்கினர். நந்தலால், நெபுலால், ராஜாராம், ஜிதேந்திரா, செவ்லால் உள்ளிட்ட பலர் தங்களின் தங்குமிடங்களுடன் உடைமைகளை இழந்தனர்.

தகவல் கிடைத்ததும், சாராய் குவாஜா காவல் நிலைய அதிகாரி தனது பணியாளர்களுடன் சம்பவ இடத்தை அடைந்தார். SHO மேலும் போலீஸ்காரர்களை அழைத்தது, பின்னர் பிரச்சினை பெரியது என்பதை உணர்ந்தார்.

ஜான்பூர் DM T.K சிங் மற்றும் எஸ்.பி. அசோக் குமார் ஆகியோர் அந்த இடத்தை அடைந்தனர், பின்னர் வாரணாசி ஆணையர் தீபக் அகர்வால் மற்றும் IG ரேஞ்ச் வி.எஸ். மீனா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் நிலைமையை ஆய்வு செய்ய வந்தனர்.

காவல்துறை தலித் பகுதியை சுற்றி வளைத்து காயமடைந்தவர்களை மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தது. ஆபத்தான கேஸ் என அறிவிக்கப்பட்ட பின்னர் 16 வயது சிறுவன் வாரணாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

முதல்வர் யோகியின் உத்தரவு

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்தை அறிந்து காவல்துறை அதிகாரிகளுக்கு கேங்க்ஸ்டர் சட்டத்தை செயல்படுத்தும்படி உத்தரவிட்டார், மேலும் குற்றவாளிகள் நூர் ஆலம் மற்றும் ஜாவேத் சித்திகி மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சுமத்துமாறு உத்தரவிட்டார். நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறியதால் உள்ளூர் காவல் நிலையத்தின் SHO மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் கட்டளையிட்டார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் ஜாவேத் சித்திகி உள்ளிட்ட 35 பேர் மோதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டதாக வாரணாசி IG வி.எஸ்.மீனா தெரிவித்துள்ளார். இழப்பு அளவை மதிப்பிடுவதற்காக காவல்துறையினர் குழு கிராமத்திற்குள் முகாமிட்டுள்ள நிலையில், தலித் பகுதிகளில் ஒரு பெரிய போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ST / SC அட்டூழியச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 58 பேர் மீது உள்ளூர் காவல்துறை FIR பதிவு செய்தது. தீ வைத்தது தொடர்பாக அடையாளம் தெரியாத 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடுகள் மற்றும் உடமைகள் எரிக்கப்பட்டவர்களுக்கு தலா 1 லட்சம் நிதி உதவியுடன் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குமாறு ஆதித்யநாத் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவருக்கு முதல்வர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தங்குமிடம் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Cover Image Courtesy: OpIndia

Similar News