இந்தியாவுக்கு அனைத்து உதவிகள் செய்யப்படும்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்.!

கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக அமெரிக்கா பாதிக்கப்பட்டிருந்தபோது, இந்தியா உதவிக்கரம் நீட்டியது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தியா கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் திணறி வரும் நிலையில் அனைத்து உதவிகளையும் அமெரிக்க வழங்கும் என்று துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-09 03:55 GMT

கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக அமெரிக்கா பாதிக்கப்பட்டிருந்தபோது, இந்தியா உதவிக்கரம் நீட்டியது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தியா கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் திணறி வரும் நிலையில் அனைத்து உதவிகளையும் அமெரிக்க வழங்கும் என்று துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் சார்பில் புலம்பெயர்ந்தோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது: எனது முந்தைய தலைமுறையினர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் எனக் கூறினார். இந்தியாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள், என்95 முகக்கவசங்கள் அனுப்பபட்டுள்ளது.

மேலும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ரெம்டெசிவிர் மருந்தும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேவைப்படும் அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு செய்யும் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதி பூண்டுள்ளார்.

Similar News