உத்தரகண்ட் சம்பவம்: அனைத்து உதவிகளும் செய்ய தயார்.. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.!

உத்தரகண்ட் சம்பவம்: அனைத்து உதவிகளும் செய்ய தயார்.. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.!;

Update: 2021-02-08 17:28 GMT

உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், பலர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்றும் வரும் சூழலில், இந்தியாவிற்கு தேவையான உதவிகளை இங்கிலாந்து அரசு செய்ய தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம், நந்தாதேவி மலைச் சிகரத்தில் பனிப்பாறைகள் உடைந்தது. அப்போது தவுலிகங்கை நதியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, ஆற்றின் குறுக்கே வேலை பார்த்து வந்த மின்துறை ஊழியர்கள் சுமார் 125க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்னர். வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: உத்தரகண்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளவர்கள் பற்றியும், இந்திய பற்றியும் எனது சிந்தனை உள்ளது. இந்தியாவிற்கு எப்போதும் இங்கிலாந்து துணை நிற்கும். இதே போன்று பிரான்ஸ் நாடும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News