சென்னை ஐ.சி.எப்.பில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் அதிவேக ரயில் மீது தொடர்ந்து கல்வீச்சு: பொறாமைக்காரர்கள் வெறிச்செயல்

சென்னை ஐ.சி.எப்.பில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் அதிவேக ரயில் மீது தொடர்ந்து கல்வீச்சு: பொறாமைக்காரர்கள் வெறிச்செயல்

Update: 2019-02-20 11:09 GMT

சென்னை ஐ.சி.எப்.பில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 18 மாதங்களில்  தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் அதிவேக ரெயில் முதலில் ரெயில் 18 என அழைக்கப்பட்டது.  அதன்பின் அதற்கு வந்தே பாரத் விரைவு ரெயில் என பெயர் சூட்டினர். டெல்லி-வாரணாசி இடையே வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.  


ரெயில் சேவையில் எதிர்பாராத விதமாக பாதிப்பு நேரிட்டதால் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் மற்றொரு துரதிஷ்டவசமான சம்பவம் நடைபெற்றுள்ளது. ரெயிலில் மூன்றாவது முறையாக இன்று காலை கல் வீசப்பட்டுள்ளது, இதனால் ஜன்னல் சேதம் அடைந்துள்ளது.


கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி ரெயில் மீது கற்கள் வீசப்பட்டது, பின்னர் பிப்ரவரி 2-ம் தேதியும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது. இதனால் ஏற்பட்ட சேதம் சரிசெய்யப்பட்டது. புதுடெல்லியில் இருந்து ரெயில் கான்பூர் சென்ற போது கற்கள் வீசப்பட்டுள்ளது. இதனால் ஒரு ஜன்னல் சேதம் அடைந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் துண்டலாவில் கற்கள் வீசப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்த ரயிலால் அப்பகுதி மக்களிடையே பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு நல்ல பெயர் ஏற்பட்டுள்ளதாகவும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவிரைவு என்பதால் பயணிகள், பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடியுள்ளதால் எதிர் கட்சிகள் மற்றும் விஷமிகளின் பொறாமை அதிகரித்துள்ளதாகவும், அதனால்தான் எதிர்கட்சிகள் சிறிய சேதத்தை பெரிது படுத்தி கேவலமாக பேசி வருவதாகவும், விஷமிகள் கல்லெறி சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.  


Similar News