கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று காலை முதல் திடீரென காய்கறிகள் விலை சரிந்தது ஏன் ? தகவல்களை அள்ளித் தந்த வியாபாரிகள்..

கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று காலை முதல் திடீரென காய்கறிகள் விலை சரிந்தது ஏன் ? தகவல்களை அள்ளித் தந்த வியாபாரிகள்..

Update: 2020-04-04 03:23 GMT

ஊரடங்கு உத்தரவு சென்ற வாரம் தொடங்கிய புதிதில் போக்குவரத்து அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரவேண்டிய லாரிகள் குறைந்ததால் காய்கறிகள் விலை சென்ற வாரம் அதிகமாக இருந்தது. இப்போது அத்தியாவசிய பண்டங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் கூடுதலாக அனுமதிக்கப்படுவதால் கோயம்பேடு சந்தைக்கு ஒரு நாளைக்கு 3 ஆயிரம் டன் அளவில் நேற்று முதல் வரத்தொடங்கியுள்ளது. இதனால் காய்கறி விலை முந்தைய விலையில் அதாவது சென்றவாரம் விற்ற விலையை விட குறைவான விலையில் விற்கப்படுவதாக வியாபாரிகள் கூறினர்.

மேலும் ஊரடங்கு அமலுக்கு வரும் முன்பாக சாதாரண நாட்களில் கோயம்பேடு சந்தைக்கு 5 ஆயிரம் டன் அளவுக்கு காய்கறிகள் வரத்து கொண்டு இருந்தது, ஆனால் இப்போது கல்லூரி விடுதிகள், பெரிய நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், ஏராளமான ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ளதால் காய்கறிகளுக்கு தேவை குறைந்து 3 ஆயிரம் டன் அளவில் மட்டுமே வந்து கொண்டிருப்பதாகவும் வியாபாரிகள் கூறினர்.

மேலும் கோயம்பேடு சந்தையில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்றும் செய்திகள் வந்தன. இப்போது அரசு அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பதாகவும், பேரிடர் குழுவினர் இங்கு சுகாதார பணிகளை செய்து வருவதாகவும், வியாபாரிகளுக்கும், இங்குள்ள தொழிலாளர்களுக்கும் முகக் கவசங்கள், சாநிடைசர்கள், கபசுர நீர் அளிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.   

Similar News