பேட்மிண்டன் வீரங்கனையை மணக்கும் விஷ்னு விஷால்..

பேட்மிண்டன் வீரங்கனையை மணக்கும் விஷ்னு விஷால்..

Update: 2020-04-01 11:15 GMT

தரமான திரைபடங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் விஷ்னு விஷால். 2011ம் ஆண்டு ரஜினி என்பவரை காதலித்து மணம்புரிந்தவர் கடந்த ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

அதன் பின்னர் மது போதைக்கு அடிமையானவர் தனது வாழ்கையின் கடினமான அந்த கட்டத்தை தான் எப்படி உடற்பயிற்சி மூலம் தான் கடந்து வந்தேன் என்பதை உருக்கமான பதிவு மூலம் சமூக வலைதளத்தில் வெளிபடுத்தியிருந்தார்.

கடந்த ஒரு வருடமாக விஷ்னு விஷாலும் பேட்மின்டன் வீரங்கனையான ஜ்வாலா கட்டாவும் இனைந்து உலா வரும் படங்கள் வெளியாகி வந்தன. இருவருக்குமிடையே காதல் இருப்பதாகவும் கிசு கிசுக்கப்பட்டது.

அதனை உறுதி செய்யும் விதமாக 2020ம் ஆண்டும் புத்தாண்டன்று இருவரும் நெருக்கமாக இருக்கும் படத்தினை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுருந்தார் ஜ்வாலா. இந்நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டியொன்றில் தானும் விஷ்னு விஷாலும் விரைவில் திருமணம் புரிந்து கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார் ஜ்வாலா கட்டா.

Similar News