ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து : ராகுலின் முடிவு குறித்து தி.மு.க-வின் நிலை என்ன?

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து : ராகுலின் முடிவு குறித்து தி.மு.க-வின் நிலை என்ன?

Update: 2019-02-25 19:00 GMT

இயல்பாகவே தேர்தல் நெருங்கும் சமயங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோவில் கோவிலாக சென்று, ஹிந்துக்களின் வாக்கை கவர திட்டமிடுவார். குஜராத் தேர்தல், கர்நாடக தேர்தல் என்று அனைத்து தேர்தல்களிலும் கோவில்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து கொள்ளும் பழக்கத்தை கடைபிடித்து வந்தார்.


அந்த வகையில், இரு தினங்களுக்கு முன்பு திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தார்.


அதன் பின், திருப்பதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்றும், இதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் பேசினார். 


அந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் அது தமிழகத்தை பாதிக்கும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சியோ, அல்லது கூட்டணி வைத்துள்ள தி.மு.க-வோ, ராகுல் இவ்வாறு பேசியது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


இது குறித்து பதிவிட்டுள்ள அரசியல் விமர்சகர் மாலன், "ஆந்திரத்திற்கு அளிக்கப்படுன் சிறப்பு அந்தஸ்து தமிழக நலன்களை பாதிக்கும்.


காங்கிரசின் இந்த நிலை குறித்து தி.மு.க-வின் நிலை என்ன?", என்று கேள்வி எழுப்பியுள்ளார்.




https://twitter.com/maalan/status/1099140070185984000?s=19

Similar News