அனல் பறக்கும் அயோத்தி விவகாரம் - பாபர் வந்ததும் இல்லை,முஸ்லிம்கள் அங்கு தொழுகையும் நடத்தவில்லை!!

அனல் பறக்கும் அயோத்தி விவகாரம் - பாபர் வந்ததும் இல்லை,முஸ்லிம்கள் அங்கு தொழுகையும் நடத்தவில்லை!!

Update: 2019-08-28 03:40 GMT

அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடத்தில் 1934ம் ஆண்டுக்கு பின் முஸ்லிம்கள் தொழுகை நடத்தவில்லை' என நிர்மோஹி அகாடா அமைப்பு தெரிவித்துள்ளது.


அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
விசாரணையின் 13ம் நாளான நேற்று நிர்மோஹி அகாடா சார்பில் ஆஜரான சுசில் ஜெயின் கூறியதாவது: ராம் லல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நாங்கள் எதிர்க்கவில்லை. சர்ச்சைக்குரிய கட்டடத்துக்குள் 1934ம் ஆண்டுக்கு பின் முஸ்லிம்கள் நுழையவில்லை; அங்கு தொழுகையும் நடத்தவில்லை.


சர்ச்சைக்குரிய கட்டடம் கோவிலாக அகாடாவால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இதற்கான வருவாய்த்துறை ஆதாரங்கள் உள்ளன. மேலும் இந்த விவகாரத்தில் முஸ்லிம்கள் தரப்பில் மிகவும் காலம் தாழ்த்திதான் மனு தாக்கல் செய்யப்பட்டது. அயோத்தியில் 1885ம் ஆண்டு நடந்த கலவரத்துக்கு பின் தான் சர்ச்சைக்குரிய கட்டடத்தில் முஸ்லிம்கள் நுழைந்தனர். 1934ல் அந்த கட்டடத்தை ஹிந்துக்கள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
'அகில பாரதிய ஸ்ரீ ராம் ஜன்மபூமி புனருதார் சமிதி' என்ற அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.என். மிஸ்ரா கூறியதாவது: அயோத்திக்கு பாபர் வந்ததும் இல்லை; அங்கு மசூதி கட்டவும் இல்லை. பாபர் மசூதியை முகலாய படை தளபதி மீர் பாகி என்பவர் கட்டியதாக கூறுகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட ஒருவர் இருந்தற்கான ஆதாரம் இல்லை. ஆனால் ஹிந்துக்கள் அங்கு பல்லாயிரம் ஆண்டுகளாக வழிபட்டு வந்துள்ளனர்.


அயோத்தி ராம ஜன்மபூமி பற்றி பல புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய கட்டடத்தை மசூதி என கூற முடியாது. ஏனெனில் மசூதி என கூறப்படுவதற்கான அமைப்புகள் அங்கு இல்லை. அயோத்தியில் தொல் பொருள் ஆய்வுத்துறை நடத்திய ஆய்வில் அங்கு ஹிந்து கோவில் இருந்தது உறுத்தப்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


Similar News