குழந்தைகள் மற்றும் பெண்கள் மூலம் எல்லை தாண்டி கொண்டுவரப்பட்ட RDX வெடிபொருட்கள் : புல்வாமா தாக்குதலின் பின்னணி

குழந்தைகள் மற்றும் பெண்கள் மூலம் எல்லை தாண்டி கொண்டுவரப்பட்ட RDX வெடிபொருட்கள் : புல்வாமா தாக்குதலின் பின்னணி

Update: 2019-02-22 05:08 GMT

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை கொண்டு வருவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தப்பட்டதாக ஜீ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


கடந்த சில மாதங்களாக எல்லையை தாண்டி வெடி மருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் வெடிமருந்துகளை வெடிக்க செய்யும் இயந்திரம் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது என்றும் அந்த செய்தி குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.


தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட RDX வெடிபொருள், இராணுவ A5 தர வகையை சார்ந்தது என குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த வெடிபொருள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மூலம் சில மாதங்களாக சிறிய சிறிய அளவில் எல்லையை தாண்டி கொண்டுவரப்பட்டுள்ளது. பிப்ரவரி 14 தாக்குதலுக்கு புல்வாமாவில் அவை அனைத்தும் சேகரிக்கப்பட்டது.


ஆர்.டி.எக்ஸ்(RDX) என்பது மிகவும் நிலையற்ற கலவையாகும். எளிதில் கையாளக்கூடிய வகையில் மெழுகு அல்லது சோப்புடன் கலக்கப்பட்டு கையாளப்படும் என்று ராணுவ வட்டார தகவல்கள் தெரிவித்ததாக ஜீ நியூஸ் குறிப்பிட்டுள்ளது.


A5 தர ஆர்.டி.எக்ஸ் 98.5 முதல் 99.5 சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்றும் மிகவும் விலையுயர்ந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. புல்வாமா தாக்குதலில் சுமார் 300 கிலோ ஆர்.டி.எக்ஸ் பயன்படுத்தப்பட்டது.


இராணுவ தர வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஜெய்ஷ் ஈ முஹம்மது அமைப்பிற்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி புரிந்துள்ளதையே காட்டுகிறது.


இந்திய புலனாய்வு அமைப்புகளின் படி, பஸ் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட RDX வெடிபொருட்கள், ராவல்பிண்டியில் பாகிஸ்தான் இராணுவத்தால் வாங்கப்பட்டு, ஜெய்ஷ் ஈ முஹம்மது அமைப்பிற்கு ஒப்படைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆர்.டி.எக்ஸ் சேகரிக்கும் பணி மார்ச் 2018 ல் தொடங்கி, பைகள், சிலிண்டர்கள் மற்றும் நிலக்கரி பைகள் மூலம் புல்வாமா கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது என்று செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.


Similar News