எடியூரப்பா தலைமையிலான கர்நாடக மந்திரிசபை நாளை விரிவாக்கம்: சுயேச்சை எம்.எல்.ஏ. உள்பட 14 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பு!!

எடியூரப்பா தலைமையிலான கர்நாடக மந்திரிசபை நாளை விரிவாக்கம்: சுயேச்சை எம்.எல்.ஏ. உள்பட 14 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பு!!

Update: 2019-08-19 10:59 GMT

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கூட்டணி ஆட்சி கடந்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி கவிழ்ந்தது. இதைதொடர்ந்து முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றார். அவருடன் மந்திரிகள் யாரும் பதவி ஏற்கவில்லை. இதனால் மந்திரிசபையில் எடியூரப்பா ஒருவர் மட்டுமே இருக்கிறார்.


இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் 20-ந் தேதி (நாளை) நடைபெறும் என்று எடியூரப்பா ஏற்கனவே அறிவித்தார். இதுகுறித்து கவர்னர் வஜூபாய் வாலாவிடம் எடியூரப்பா அனுமதி கோரினார். அதற்கு கவர்னர் அனுமதி வழங்கியுள்ளார்.
அதன்படி கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடக்கிறது. 25 நாட்களுக்கு பிறகு இந்த மந்திரிசபை விரிவாக்கம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுயேச்சை எம்.எல்.ஏ. நாகேஷ் உள்பட 14 பேர் மந்திரிகளாக பதவி ஏற்கிறார்கள். இன்னொரு சுயேச்சை எம்.எல்.ஏ. சங்கர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது


Similar News