பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு: தூத்துக்குடி தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் பேச்சு.!
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு: தூத்துக்குடி தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் பேச்சு.!
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டும் வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மனுக்கள் வாங்கியதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
வறட்சியால், கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கட்னகளை தள்ளுபடி செய்வதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 5 லட்சம் மனுக்களுக்கு அரசு தீர்வு கண்டுள்ளதாக முதலமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். கிராமத்தில் வசிக்கும் வீடு இல்லாத எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்று உறுதியளித்தார்.
ஆழ்வார் திருநகரி பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை அமைக்கும் பணி துவக்கப்படுவதையும் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், மீண்டும் அதிமுக ஆட்சியில் வருகின்றபோது தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் சேமிக்கப்படும் என கூறினார்.
இருமல் வருகின்ற நேரத்தில் தான் தண்ணீர் குடிப்பதை, சத்தான பால் குடிப்பது போன்று செய்தி வெளியிடுகின்றனர் என இடையில் சிரிப்பலையை முதலமைச்சர் ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.