இது கொள்கை இல்ல கூமுட்டை: விஜய்யின் கொள்கைக்கு எதிராக பொங்கிய சீமான்!

Update: 2024-11-02 16:55 GMT

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தை பல முறை வரவேற்ற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சமீபத்திய மாநாட்டுக்கு உணர்வுபூர்வமாக வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்திய நடிகர் விஜய், 'திராவிடமும் தமிழ் தேசியமும் தான் எங்கள் கொள்கை' என்று அறிவிப்பை வெளியிட்டார். அது மட்டுமின்றி ஆ ஊ என்று சத்தமா? கோபமா? பேசி விட்டால் போதுமா என்றும் கிண்டல் தொனியில் விஜய் பேசியிருந்தார். இந்த ஒரு விமர்சன பேச்சு சீமானை நேரடியாக தாக்கும் வகையில் விமர்சனங்களாக எழுந்தது.


இதனால் விஜயின் அரசியல் வருகையை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த சீமானுக்கு பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.மாநாடு நடந்த அன்று செய்தியாளர்களிடம் கருத்து கூறிய சீமான், 'திராவிடமும், தமிழ் தேசியமும் வேறு வேறு. விஜய் கொள்கை எங்கள் நிலைப்பாட்டுக்கு எதிரானது' என்று கூறி அதிருப்தி வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில், விஜய் அறிவித்த கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும் காட்டுப்பூனையும், நாட்டு கோழியும் ஒன்றா? திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என்பது கொள்கை அல்ல. அது அழுகிய கூமுட்டை. சாலையில் ஏதாவது ஒரு பக்கம் நிற்கவேண்டும். நடுவில் நின்றால் லாரி அடித்து இறந்துவிடுவாய். இது போல திராவிடத்துக்கும், தமிழ் தேசியத்துக்கும் என்ன வித்தியாசம்? என்பதை பல்வேறு உதாரணங்களை காட்டி சீமான் பேசினார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News