திராவிடக் கல்வி மாடல்: அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு திரையிடப்பட்ட கோட் மற்றும் வேட்டையன்!
கடந்த சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்டம் விகேபுரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் வேட்டையன் மற்றும் தி கோட் திரைப்படங்கள் பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு திரையிடப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு வேட்டையின் திரைப்படமும் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு கோட் திரைப்படமும் திரையிடப்பட்டுள்ளது இதற்காக சுமார் 600 மாணவர்களிடம் கோர்ட் திரைப்படத்திற்காக 25 ரூபாயும் வேட்டையன் திரைப்படத்திற்காக 10 ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது இதற்கு அப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர் மேலும் அப்பள்ளி நிதி ஆதாயத்திற்காக பள்ளி நேரத்தை தவறாக பயன்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது
இதனை அடுத்து அதிகரித்து வரும் கவலைகளின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் விசாரணைக்கு உத்தரவிட்டு பள்ளியை பார்வையிட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் மாணவர்கள் ஓய்வெடுக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுவதாகக் கூறி பள்ளி முதல்வர் திரையிடல்களை ஆதரித்ததாக சிஇஓ குறிப்பிட்டார் இருப்பினும் மாணவர்களிடம் வசூலித்த பணத்தை திரும்ப வழங்குமாறும் தலைமை நிர்வாக அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.