அடிப்படை கூட தெரியாமல் கருத்து தெரிவித்த நடிகர்: வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்.!
அடிப்படை கூட தெரியாமல் கருத்து தெரிவித்த நடிகர்: வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்.!;
நடிகர் சித்தார்த், விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன் எனும் பெயரில் தவறான தகவல்களை பரப்பி வருவதற்கு, நெட்டிசன்கள் விளக்கம் கொடுத்து, பாடம் எடுத்து வருகிறார்கள்.
தங்களுக்கு பரிச்சயமோ / விவரமோ தெரியாத விவகாரங்களில் சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவிப்பது சமூக வலைதளங்களில் புதிய விஷயமல்ல. என்ன கருத்து சொன்னாலும் அதற்கு ஆரவாரம் செய்ய ரசிகர் கூட்டம் இருக்கும் போது தங்களை அறிவுஜீவி போல நினைத்துக் கொள்வது சகஜமே. ஆனால் அத்தகைய பேச்சுகள் வன்முறையை, தவறான தகவல்களை பரப்பும் பட்சத்தில் கொஞ்சம் பின்வாங்குவதே சிறந்தது. ஆனால் சிலர் இதை ஏற்றுக் கொள்ளாமல் மக்கள் நலனுக்கு விரோதமான கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.
இவர்களில் ஒருவர் தான் நடிகர் சித்தார்த். ரங் தே பாஸந்தி போன்ற புரட்சி படங்களில் நடித்ததாலோ என்னவோ, ட்விட்டரில் காரண காரியம் இல்லாமல் அரசாங்கத்தை எதிர்த்து ட்வீட் செய்வது ஒன்றையே புரட்சி என நினைத்து வருகிறார். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு சமீபத்திய விவசாய சீர்திருத்தங்கள் - இந்திய விவசாயிகளால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டவை. சில மாநிலங்களை சேர்ந்த இடைத்தரகர்களும், காலிஸ்தானிகளும், அவர்களால் தவறாக வழிநடத்தப்படும் விவசாயிகளும் போராடி வருகின்றனர்.
இதைக்குறித்து இன்று ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் தான் கோதுமை ரொட்டி சாப்பிட்டதாகவும், அது மிகவும் சுவையாக இருந்தது என்று விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தார். ஒரு விவசாயி இறந்தால், நாம் அனைவரும் இருக்கிறோம், ஒரு விவசாயி போராடினால் நாம் அனைவரும் போராட வேண்டும்..விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருளின் விலையை தாங்களே நிர்ணயிக்க வேண்டும்" என்றெல்லாம் கூறியிருந்தார்.
Ate a wheat tandoori roti. Grateful. Amazed at the smell & taste of pure wheat. If 1 farmer dies, we all die. If 1 farmer protests, we all protest... Annadhaatha sukhi bhava...god bless and save my saviour. The farmer decides the quantity and price of his harvest. #FarmersProtest
— Siddharth (@Actor_Siddharth) February 6, 2021