ஒருபுறம் முழு ஊரடங்கு மறுபுறம் ரேசன் கடைகளில் நிவாரணம் விநியோகம் - திட்டமிட தெரியாமல் திணறுகிறதா தி.மு.க அரசு?
இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனால் முழு ஊரடங்கு நாளிலும் கொரோனா நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனால் அனுபவமின்றி பேரிடர் காலத்தில் தி.மு.க அரசு முடிவெடுக்க தயங்குகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் நேற்று முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இதன்படி தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி மதியம் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டது.
ஆனால் இப்படி ஊரடங்கு கட்டுபாட்டை ஒருபுறம் அறிவித்துவிட்டு மறுபுறம் நேற்று முதல் டோக்கன் அடிப்படையில் தினமும் 200 பேர் வீதம் ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் டோக்கன் பெற்றுள்ளோருக்கு தடையின்றி ரேஷன் கடைகளில் இன்று நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஊரடங்கு அறிவிப்பே கோரோனோ பரவல் சங்கிலியை உடைபதற்காகாதான் ஆனால் ஒருபுறம் ஊரடங்கை அறிவித்துவிட்டு மறுபுறம் ரேசன் கடைகளில் மக்கள் கூட்டத்தை கூட்டி 2000 ரூபாய் நிவாரணம் வழங்குவது ஆளும் தி.மு.க அரசின் அனுபவமின்மை மற்றும் திட்டமிடலில் உள்ள குளறுபாடு என்றே தெரிவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.