வக்பு வாரியச் சட்டம் என்றால் என்ன ?
வக்பு வாரியச் சட்டம், 1954:
அசல் நில வழங்கல் ஆவணம் தொலைந்து போனாலும், ஒரு சொத்து நீண்ட காலமாக மதம் மற்றும் தொண்டு செய்யும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு இருந்தால், அது வக்பு என்று கருதலாம் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது.
- வக்பு வாரிய சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் முடிவெடுக்க உரிமையியல் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
- வக்பு வாரிய கணக்கெடுப்புக்கான செலவை வக்பு வாரியத்தால் நியமிக்கப்பட்ட முத்தாவல்லி ஏற்க வேண்டும்; கணக்கெடுப்புகளுக்கான நிதி வக்பு வாரியத்தின் வருமானத்தில் இருந்து வழங்கப்படும்.
- சட்டப்பிரிவு 27-ன் படி, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடராத வரை, ஒரு சொத்து வக்பு வாரிய சொத்தா என்பதை ஆய்வு செய்து, தகவல்களை பெறவும், அதுகுறித்து இறுதி முடிவெடுக்கவும் வக்பு வாரியத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
வக்பு வாரிய சட்டம், 1995:
- வக்பு சொத்து என அறிவிக்கப்பட்ட இடங்களில், தற்போது எந்த பணிகள் நடந்தாலும் அதை கருத்தில் கொள்ளாமல் வக்பு சொத்தாகவே கருதப்படும்.
- வக்பு சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நிறுவப்பட்ட வக்பு தீர்ப்பாயங்களில் எடுக்கப்படும் இறுதி முடிவுகளுக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்ய முடியாது.
- நியமனம் செய்யப்பட்ட முத்தாவல்லிகள், நிர்வாகக் குழுக்களின் உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அரசு ஊழியர்களாக வக்பு அலுவலகத்தில் பதவி பெற்று உள்ளனர்.
வக்பு வாரிய திருத்தச்சட்டம், 2013:
- முஸ்லீம் அல்லாதவர்களும் வக்புக்களை உருவாக்க அனுமதிக்கப்பட்டனர்.
- வக்பு சொத்துகளை, குத்தகை பெற்றவர்கள் மற்றும் குத்தகைதாரர்களின் உரிமைகள் மற்றும் குடியிருப்பவர்களை வெளியேற்றுவது தொடர்பான விஷயங்களில் வக்பு தீர்ப்பாயங்கள் தீர்ப்பளிக்க வழிவகை செய்யப்பட்டது.
- வக்பு சொத்துக்களை கணக்கெடுப்பதற்கு ஆகும் செலவு மாநில அரசின் செலவாக மாற்றப்பட்டது ஆவணங்கள் இல்லாமல் மத பயன்பாட்டிற்கான சான்றுகளின் அடிப்படையில் நிலத்தை வக்புவாக அறிவிக்க அனுமதிக்கப்பட்டன.
- ஒரு சொத்து வக்பு சொத்தா என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் உட்பட பல்வேறு அதிகாரங்கள் வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது.