
புது தொழில்முனைவோரை உருவாக்கி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டம், தனது 10 ஆண்டு வெற்றிப் பயணத்தை இன்று (ஏப்ரல் 8, 2025) கொண்டாடுகிறது. 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இத்திட்டம்,சிறு மற்றும் நுண் தொழில்களுக்கு பிணையில்லா கடன்களை வழங்கி புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
10 ஆண்டுகளில் முத்ராவின் சாதனைகள்
52 கோடி கடன்கள் வழங்கல்: இதுவரை 52 கோடிக்கும் மேற்பட்ட பிணையில்லா கடன்கள், ரூ.33 லட்சம் கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன. இது சிறு தொழில்களின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது
பெண்களுக்கு முன்னுரிமை: முத்ரா கடன்களில் சுமார் 70% பெண் தொழில்முனைவோரால் பெறப்பட்டுள்ளன. இது பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்தி நாரி சக்தியை வலுப்படுத்தியுள்ளது
சமூக நீதி: 50 சதவீதம் முத்ரா கடன்கள் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு அனைவரையும் உள்ளடக்கிய தொழில்முனைவை ஊக்குவித்துள்ளது
புதிய தொழில்முனைவோருக்கு ஆதரவு: முதல் முறையாக தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டு, புதிய தொழில்களைத் தொடங்குவது எளிதாக்கப்பட்டுள்ளது
வேலைவாய்ப்பு உருவாக்கம்: 2015-18 ஆம் ஆண்டுகளில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. முத்ரா திட்டம் இந்தியாவின் வேலைவாய்ப்பு இயந்திரமாக மாறியுள்ளது
பீகாரின் முன்னேற்றம்: பீகார் மாநிலம், சுமார் 6 கோடி கடன்களைப் பெற்று, இந்தியாவில் முத்ரா கடன் பெறுவதில் முன்னிலை வகிக்கிறது. இது அம்மாநிலத்தில் தொழில்முனைவு உணர்வை பிரதிபலிக்கிறது
பிரதமரின் பாராட்டு:
#10YearsofMUDRA என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த சாதனைகள், பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டில் முத்ரா பயனாளிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் மூலம் மேலும் வெளிச்சத்திற்கு வந்தன முத்ரா யோஜனா, பலரது கனவுகளை நனவாக்கியுள்ளது. இது ஒரு திட்டம் மட்டுமல்ல ஒரு இயக்கம் என்று பிரதமர் மோடி பெருமையுடன் தெரிவித்தார்.