உலக நாடுகளிடையே பிரம்மோஸ் ஏவுகணைக்கு அதிகரிக்கும் டிமாண்ட்:17 நாடுகள் முனைப்பு!

Update: 2025-07-20 06:25 GMT

பிரம்மோஸ்ஸின் தோற்றம்

கடந்த 1998 ஆம் ஆண்டு இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து சூப்பர்சானிக் ஏவுகணையை தயாரிக்க ஒப்பந்தம் செய்து கொண்டது அதன்படி தயாரிக்கப்பட்ட ஏவுகணைப்பு இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்வா நதிகளின் பெயர்களை இணைத்து பிரம்மோஸ் என இந்தியா பெயரிட்டது அதுமட்டுமின்றி படைப்பின் கடவுளான பிரம்மனின் வலிமை மிக்க ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை இந்த ஏவுகணை பிரதிபலிக்கும் என்ற வகையில் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது 


ஏன் பிரம்மோஸ் சிறந்தது

பிரம்மோஸ் ஏவுகணை நீர் நிலம் வான் என மூன்று பரப்பிலிருந்தும் ஏவ முடியும் என்பதால் கடற்படை ராணுவம் மற்றும் விமானப்படையில் பிரம்மோஸ் சேர்க்கப்பட்டது ஒலியை விட மூன்று புள்ளி ஐந்து மடங்கு வேகத்தில் சீறி பாய கூடிய இந்த ஏவுகணை 300 கிலோ வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது தற்போதுள்ள பிரம்மோஸ் ஏவுகணைகள் 500 கிலோமீட்டர் வரையிலான இலக்கை துல்லியமாக தாக்கி அளிக்கும் திறன் கொண்டது அதே சமயத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 800 கிலோமீட்டர் தொலைவில் தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையில் சோதனையும் வெற்றிகரமாக நடந்துள்ளது


கெத்து காட்டிய பிரம்மோஸ்

ஆப்ரேஷன் சிந்தூரிலும் ரஷ்யா உக்ரைன் போரிலும் பிரம்மோஸ் ஏவுகணையின் சாதனைகள் ஏராளமாக கூறப்படுகிறது குக்கரை நாள் நிறுவப்பட்ட தடுப்பு கவசங்களால் பிரம்மோஸ்ஸை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதை உக்ரைன் ராணுவம் ஒப்பு கொண்டது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமின்றி சீனாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக ஏற்கனவே பிலிப்பைன்ஸ் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்கி தன் எல்லை பகுதிகளில் நிறுவியுள்ளது 


அதிகரிக்கும் டிமாண்ட்

இந்த நிலையில் 17க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது இந்தோனேசியா மலேசியா சிங்கப்பூர் தாய்லாந்து பிரேசில் சவுதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம் வியட்நாம் கத்தார் ஓமன் எகிப்து சிலி அர்ஜென்டினா வெனிசுலா பல்கேரியா தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணை வாங்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது

சீறிப்பாய போகும் இந்தியாவின் விஷ்ணு


இப்படி ரஷ்யா மற்றும் இந்தியா இணைந்து உருவாக்கிய ஏவுகணைக்கு தேவை அதிகரித்துள்ள நிலையில் பிரம்மோசைவிட மூன்று மடங்கு 2,500 கிலோமீட்டர் வேகத்தில் சீறி பாயும் விஷ்ணு என்ற ஏவுகணையை இந்தியா சொந்தமாக தயாரித்து வருகிறது இதற்கான சோதனையும் அண்மையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News