வாயைப் பிளக்க வைக்கும் ஆடம்பர வீடுகள்.!

வாயைப் பிளக்க வைக்கும் ஆடம்பர வீடுகள்.!

Update: 2020-10-21 14:04 GMT
வீடு வாங்குவது என்பது இந்தியாவின் பலருடைய கனவு . எல்லோரும் தனக்கென்று ஒரு வீடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதில் தப்பு ஒன்றும் கிடையாது. ஏராளமானோர் வாழ்க்கை இலட்சியமும் ஆகவும் வீடு வாங்குவது இருக்கிறது. இன்னும் பலர் வீடு இல்லாத நிலையில் வாழ வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கிறார்கள் இதை நாட்டில் தான் மிக மிக விலை உயர்ந்த வீடுகளும் கட்டப்படுகின்றன மற்றும் வாங்கப்படுகின்றன.


 சில ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மும்பையில் ஆடம்பர பங்களா ஒன்றை கட்டினார். உலகின் விலை மதிப்பான வீடுகளின் பட்டியலில் இந்த வீடும் இடம் பெற்றுள்ளது. பூங்கா, ஹெலிகாப்டர் தளம், சினிமா தியேட்டர் என பல வகையான நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. அது எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பசுமை பொங்க வடிவமைத்திருக்கிறார்கள். இப்போது இந்த விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் மற்றொரு விடும் இடம் பெற்றுள்ளது. அது மும்பையில் உள்ள ஜாட்டியா மாளிகை ஆகும். 





மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ள இந்த வீட்டை இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான குமார் மங்கலம் பிர்லா 425 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் சமீபத்தில் வாங்கப்பட்ட விலை மதிப்பான வீடு இதுதான். இதற்கு முன்பு 2011 இதே பகுதியில் மகேஸ்வரி இல்லம் 400 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக மிரங்க்கார் இல்லம் 2014 ஆம் ஆண்டில் 372 கோடி ரூபாய்க்கு விலை போனது. 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த சொத்து லிப்டில் சாலையில் அமைந்துள்ளது. 


Similar News