மழைக்காலத்தில் சரும பராமரிப்பு பற்றிய சில டிப்ஸ்கள்.!

மழைக்காலத்தில் சரும பராமரிப்பு பற்றிய சில டிப்ஸ்கள்.!

Update: 2020-10-22 08:34 GMT

மழைக்காலம் மனதுக்கு இனிமையாக இருந்தாலும் அது சருமத்திற்கு தொந்தரவை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய ஒரு காலகட்டம். ஏனெனில் ஈரப்பதமான காலநிலை சரும செல்களுக்கு ஒத்துக்கொள்ளாது. மற்ற காலங்களை விட மழைக்காலங்களில் தான் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். அந்த சமயத்தில் சருமத்தை சரியாக கவனித்துக் கொள்ளாவிட்டால் சரும நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.



நிறைய பேர் மழைக்காலத்தில் சரும பராமரிப்பில் செய்யும் தவறுகள் காரணமாக முகப்பருக்கள் தோல் அலர்ஜி அரிப்பு எரிச்சல் போன்ற பிரச்சினைகளை எதிர் கொள்வார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு சில டிப்ஸ்கள் உதவி செய்யலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பயன்படுத்தி உங்கள் சருமத்தை மழைக்காலங்களில் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.



 

மழைக்காலத்தில் தண்ணீர் பருகுவதை குறைத்தால் அது சருமத்திற்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். குளிர்ந்த காலநிலை நிலவும் என்பதால் தண்ணீர் தாகம் அவ்வளவாக இருக்காது. அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்கக்கூடாது. தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டிய ஒரு காலகட்டம்.

மழைக்காலங்களில் நிறைய பேர் முகம் கழுவுவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. இடைவெளியில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் சேர்ந்துவிடும். இதனால் அரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே மழைக்காலங்களில் மூலிகை தன்மைக் கொண்ட க்ரீம்களை பயன்படுத்தி முகத்தை கழுவுங்கள்.

மழைக் கால கட்டங்களில் இருக்கும் ஈரப்பதம் மற்றும் அதன்படி அழுக்குகள் சருமத் துளைகளை அடைத்து விடும். அப்படியிருக்கையில் மேக்கப் செய்வது அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடும். முகப்பரு பிரச்சினை உள்ளவர்களுக்கும் மேக்கப் இல்லை. இருப்பதன் தன்மை கொண்ட முகங்களை பயன்படுத்தி சருமத் துளைகளை அடைக்காமல் பாதுகாக்கலாம்.

Similar News