#IITMadras மான்களை வேட்டையாடும் நாய்க் கூட்டம் - தீர்வு காண முட்டுக்கட்டை போடும் NGOக்கள்.!

#IITMadras மான்களை வேட்டையாடும் நாய்க் கூட்டம் - தீர்வு காண முட்டுக்கட்டை போடும் NGOக்கள்.!

Update: 2020-12-14 10:56 GMT

ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் திரியும் நாய்கள் மான்களை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் ஐஐடியின் நற்பெயரைக் கெடுப்பதாக பத்மஸ்ரீ விருது பெற்றவரும் ஐஐடி மெட்ராஸில் பணிபுரிபவருமான பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த நிரந்தர குழுவின் கூட்டத்தில் பேசிய பேராசிரியர், இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் கல்வி நிறுவனமான ஐஐடியின் மதிப்பும் நற்பெயரும் களங்கமடைவதால் நாட்டின் நற்பெயரும் கெடுவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஐஐடி மெட்ராசுக்கு ‘Institute of Eminence’ அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில், வெளிநாட்டு பேராசிரியர்களும் மாணவர்களும் வளாகத்துக்கு வரும் போது நாய்களின் தொல்லையை சந்திக்க நேரிட்டால் அது ஐஐடியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் அச்சம் தெரிவித்துள்ளார். எனவே இதைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று பசுமைக் தீர்ப்பாயத்துக்கும் குழுவுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 

தானே பல முறை நாய்களின் தொல்லையை நேர்கொண்டதாகவும் பல சமயங்களில் நாய்கள் கடித்து விடும், துரத்தும் என்ற அச்சத்தில் காரில் இருந்து வெளியே கூட இறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். கடந்த 40 வருடங்களாக வளாகத்தில் வசித்து வந்த போதும் கடந்த 2,3 ஆண்டுகளாகத் தான் நாய்கள் தொல்லை அதிகரித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கு விலங்குகள் நலம் என்ற பெயரில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இவற்றின் அழுத்தத்தின் பேரில் தான் நாய்களுக்கு உணவு வழங்க என்று இருந்த 5 இடங்கள் 14ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வீட்டு உணவு வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து குழந்தைகள் வெளியே விளையாடக் கூட முடியாத அளவு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. 

வீடுகளில் வளர்க்ப்பட்டு கைவிடப்படும் நாய்களை விலங்குகள் நல ஆர்வலர்கள் வளாகத்துக்குள் கொண்டு வந்து விடுவதால் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த‌ முடிவுகளுக்கு வளாகத்தில் வசிக்கும் 400 பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களில் 98% பேர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாக பேராசிரியர் கூறியுள்ளார்.
 

 

இதற்கு தீர்வாக தெரு நாய்களுக்கு கருத்தடை, எலக்ட்ரானிக் டேக், தெரு நாய்க் கூட்டங்களின் தலைமை நாய்களை கூண்டுக்குள் அடைப்பது உள்ளிட்டவற்றை பேராசிரியர் ஜுன்ஜுன்வாலா முன்வைத்துள்ளார். ஆனால் இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு காண விடாமல் விலங்குகள் ஆர்வலர்கள் என்ற பெயரில் இயங்கும் சிலர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.

 

மேலும் தங்களுக்கு தெரிந்தவர்கள் நடத்தும் NGOக்கள் மூலம் நாய்களை பராமரிக்க வேண்டும் என்றும் ஐஐடி நிர்வாகத்திடம் லாபி செய்து வருகின்றனர். ஷோபா செல்லத்துரை மற்றும் ஜோ பிரகாஷ் என்ற இருவர் நடத்தும் ஜீவ காருண்யா விலங்குகள் நல அறக்கட்டளை தான் தற்போது ஐஐடி வளாகத்தில் நாய்களை பராமரித்து வருகிறது.

 

ஐஐடி மெட்ராஸ் பதிவாளர் ஜேன் பிரசாத் தனது பூர்விகமான நாகர்கோவிலைச் சேர்ந்த கிறிஸ்தவர்களை வளாகத்தில் பெருமளவில் பணிக்கு அமர்த்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. நாய்கள் பராமரிப்புக்கு நாகர்கோவிலைச் சேர்ந்த இந்த NGOவையும் அவர் தான் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

 

 

மறுபுறம் ஆன்டனி கிளமன்ட் ரூபின் என்ற 'விலங்குகள் நல ஆர்வலர்' பேராசிரியர் ஜுன்ஜுன்வாலா முன்வைத்த பரிந்துரைகளை ஏற்கக் கூடாது என்று பசுமைக் தீர்ப்பாயக் குழுவிடம் கூறியுள்ளார். மாறாக ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம் நாய்களுக்கு பூங்கா, மருத்துவமனை, உணவகம் போன்றவற்றை தனது சொந்த நிதியில் ஏற்படுத்த வேண்டும் என்று ஆன்டனி கூறி வருகிறார்.

 

இதற்காக ஒரு செயல் திட்டத்தையும் பசுமைக் தீர்ப்பாயக் குழுவிடம் வழங்கியுள்ளார். இவர் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர் என்பதும் கோவில் யானைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது கோவில்களில் இருந்து யானைகளை வெளியேற்ற பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவ, வெளிநாட்டு அமைப்புகளின் சதியாகவே பார்க்கப்படுகிறது.

 

 

ஐஐடி நிர்வாகம், பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள வனத்தில் வசிக்கும் கலைமான்கள், புள்ளிமான்கள், குள்ளநரிகள், காட்டுப் பூனைகள் உள்ளிட்ட விலங்குகளின் பாதுகாப்புக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதில்லை என்று ஆன்டனி தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். ஐஐடி நிர்வாகமோ நாய்கள் மற்றும் குரங்குகள் தொல்லையால் தான் மான்கள் அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன என்று குற்றம் சாட்டுகிறது. 

 

ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ‘Institute of Eminence’ அந்தஸ்து வழங்க விடாமல் பொய்ப் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்ற நிலையில், இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராஸின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும், இந்த சூழலைப் பயன்படுத்தி காசு பார்க்கும் விதமாகவும் கிறிஸ்தவ அமைப்புகள் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளன என்று சந்தேகிக்கப்படுகிறது.

 

ஐஐடி நிர்வாகம் இத்தகைய NGOக்களின் மிரட்டலுக்கும் அழுத்தத்துக்கும் அடி பணியாமல் நாய்த் தொல்லைக்கு நல்ல தீர்வு கண்டு குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் மான்களைக் காப்பாற்ற ஆவண செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

Similar News