"நான் கலைஞரின் மகன்" என கூற பொருத்தமானவரா ஸ்டாலின்?

"நான் கலைஞரின் மகன்" என கூற பொருத்தமானவரா ஸ்டாலின்?

Update: 2020-12-19 06:30 GMT

சிறுவர்கள் வீதியில் விளையாடும் போது ஏதேனும் சிறு விளையாட்டு சண்டைகள் வந்துவிட்டால் உடனே அடி வாங்கிய சிறுவன் "நான் யாரு தெரியுமா? எங்க அப்பா யாரு தெரியுமா? என கூவி விட்டு தந்தையை அழைக்க ஓடிவிடுவான் அந்த முறைதான் ஞாபகம் வருகிறது இன்றைக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் பேச்சை கேட்டால்.

இன்று தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்தேறியது, அந்த கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு பதிலளிக்கும் விதமாக, "நான் கலைஞர் கருணாநிதியின் மகன், தேவையின்றி எதுவும் இதற்கு மேல் பேசாதீங்க மிஸ்டர் எடப்பாடி பழனிசாமி" என கூறியுள்ளார்.

" நான் கலைஞர் மகன் இதற்கு மேல் பேசாதிர்கள்" என்றால் என்ன அர்த்தம்? 
'நான் கலைஞர் மகன் என்ற அடையாளம் மட்டுமே வைத்து தலைவரானவன் என்னிடம் உங்களுக்கு பதில் கூற வார்த்தைகள் இல்லை, என்னால் இயலாது' என்ற இயலாமையின் வெளிப்பாட்டு அர்த்தமா? அல்லது 'நான் கலைஞரின் மகன் அரசியலில் முன்னேற ஏது வேண்டுமானாலும் செய்வேன்' என்ற மிரட்டல் தோணி அர்த்தமா? அல்லது  'நான் கலைஞர் மகன் எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என என் தந்தையார் போல் துடிக்கிறேன், என்னிடம் இதற்கு மேலும் கேட்காதீர்கள்' என்ற அடிபணிதல் முறையில் அர்த்தமா?

அல்லது 'நான் கலைஞர் மகன் எனக்கு குறை கூற மட்டுமே தெரியும் என்னிடம் இதற்கு மேல் வேண்டாம்' என்ற அர்த்தத்திலா என்ற கேள்விகளை தி.மு.க'வின் உடன்பிறப்புகளே கேட்க துவங்கிவிட்டனர்.

இது பற்றிய ஒரு தி.மு.க நிர்வாகியிடம் பேசினோம், பெயர் வெளியிட விரும்பாத அவர் கூறியது, "அட என்னங்க வார்த்தைக்கு வார்த்தை 'நான் கலைஞர் மவன், நான் கலைஞர் மவன்'ன்னு சொன்னா போதுமா அதுமாதிரி நடந்துக்க வேண்டாமா? இதே கலைஞர்'தான் சாகுற வரைக்கும் கட்சியில உழைச்சவங்களை முன்னிருத்தி பேசினார். கடைசி வரைக்கும் தன் மகன் ஸ்டாலின தலைவரா அறிவிக்கலை" என்ற ஆதங்கத்துடன் துவங்கினார்.

மேலும் தொடர்ந்த அவர், "ஆனா இப்ப ஸ்டாலின் பையன முன்னாடி வைக்குறார் அந்த தம்பியோ தி.மு.க மூத்தோர்கள் மதிக்குறது இல்லை, இதே கலைஞர் இருந்தா இப்படி நடந்துருக்குமா?" என ஆதங்கத்துடன் கேட்டார்.

மேலும் பேசிய அவர், "இது தேர்தல் நேரம் தம்பி கலைஞர் இருந்துருந்தா இந்நேரம் முதல் ஆளா கூட்டணி பேசி பிரச்சாரத்த பம்பரமா ஆரமிச்சுருப்பாரு, ஆனா இங்க உதயநிதிய மட்டும் விளம்பர படுத்துற வேலைய தி.மு.க பார்க்குது. உதயநிதி'க்கு வணக்கம் வைக்கலைன்னா ஒரு உடன்பிறப்பு என்ன உழைச்சுருந்தாலும் இப்ப குப்பை தொட்டியில் தான்" என கண்ணீர் வடிக்காத குறையாக கூறினார்.

  "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை" என்ற முழக்கத்தை முழங்கி சென்று தி.மு.க'வை வளர்த்தவர்கள் கேட்கிறார்கள் "நீங்கள் பொருத்தமானவரா ஸ்டாலின்" என! பதில் கூறுவாரா கலைஞரின் மகன்?

Image source - DMK Youth Wing

Similar News