இலங்கையில் தமிழர்களை பதவிக்காக பலி கொடுத்துவிட்டு "வெளிநாட்டு வாழ் இந்தியர் நல அணி" அமைக்கும் நாடக தி.மு.க

இலங்கையில் தமிழர்களை பதவிக்காக பலி கொடுத்துவிட்டு "வெளிநாட்டு வாழ் இந்தியர் நல அணி" அமைக்கும் நாடக தி.மு.க

Update: 2021-01-09 16:58 GMT

2009 ஏப்ரல் 28'ம் தேதி  காலை மெரினா பரபரத்தது. சுழல்விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அணிவகுத்து  பறந்தன, தமிழக அமைச்சர்கள் வாகனங்கள்  கடற்கரை சாலையை அடைத்து திரண்டன. இலங்கையில் கொத்து கொத்தாக தமிழர்கள் மடிவதை பொறுத்துக்கொள்ள முடியாதால் உடனடி போர் நிறுத்தம் வேண்டி கடற்கரையில் கருணாநிதி திடீரெனச் சாகும்வரை உண்ணாவிரதம் என  உட்கார்ந்தார். உடனே உடன்பிறப்புகள் தமிழகமெங்கும் முழங்க துவங்கினர் "பார்த்தாயா என் தலைவனை தமிழனுக்கு ஒன்று எனில் தள்ளாடும் வயதிலும் தன்னை வதைத்து உண்ணாவிரத்தில் ஈடுபட்டு தமிழனை காக்க துணிந்துவிட்டார்" என பொங்கி தீர்த்தனர்.

6 மணி நேரம்தான் அந்த பதபதைப்பு இருந்தது. பின் மத்தியில் அப்பொழுது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி (அப்பொழுது அவர் உள்துறை அமைச்சர்) ப.சிதம்பரம்  போர்நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டதாக  அளித்த தகவலின்பேரில், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் தமிழர்களின் காவலன் என கொண்டாடப்பட்ட கருணாநிதி. ஆனால் உண்மையில் அன்று மட்டும் பல நூறு பேர் கொல்லப்பட்டனர் என ஐ.நா செயற்கைக்கோளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகின. 

இது முடிந்த சில நாட்களில் இலங்கையில் 
முள்ளிவாய்க்கால் கடற்கரையில் திரண்டிருந்த ஈழத்தமிழர்களில் சில நாள்களில் பத்தாயிரக்கணக்கில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். ஆனால் இந்தியாவிலோ தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், அமைச்சரவைப் பங்கீடு தொடர்பாகப் பேச டெல்லி சென்றார் கருணாநிதி. விளைவு இலங்கையில் யுத்தம் தொடர்ந்தது தமிழகத்திலோ தி.மு.க'விற்கு இலக்கான மத்திய மத்திரி பதவிகள் கணிசமான எண்ணிக்கையில் கிடைத்தன. இது வரலாறு...!

இப்படிப்பட்ட வரலாற்றை இன்று திரும்பி பார்க்க வேண்டிய நிர்பந்தத்தை தி.மு.க ஏற்படுத்தியுள்ளது. காரணம் நேற்று தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களால் அறிவிக்கப்பட்டு இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலினால் துவங்கப்பட்ட  தி.மு.க "வெளிநாட்டு வாழ் இந்தியர் (NRI) நல அணி".

என்ன வியப்பு பார்த்தீர்களா? இலங்கையில் நம் தமிழ் இன சொந்தங்கள் துப்பாக்கி முனையில் உயிரை பிடித்து வைத்துக்கொண்டிருந்த வேளையில், நம் சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் வேளையில், நம் பிஞ்சு தமிழ் இனத்தின் வாரிசுகள் முள் வேலி முகாம்களில் ரொட்டி துண்டிற்காக கிழிந்த ஆடைகளை அணிந்து கொண்டு கையேந்தி நிற்கும் வேளையில் இங்கே தி.மு.க'வின் மந்திரி பதவிகளே முக்கியம், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியே முக்கியம் என இலங்கை வாழும் தமிழர்களை கண்டுகொள்ளாத தி.மு.க இன்று "வெளிநாட்டு வாழ் இந்தியர் நல அணி" துவங்கியுள்ளது.

யாரை ஏமாற்ற? யாரை திருப்திபடுத்த? யாரிடம் பிடுங்கி திங்க? அங்கே வெளிநாட்டில் வாழும் நம் சொந்தங்களின் நலன் முக்கியமே ஆனால் அவர்கள் இங்கிருந்து சரியான ஆவணங்களை கொடுத்து ஒரு நாட்டில் அதிகாரப்பூர்வமாக வேலை செய்பவர்கள், அங்கே அவர்களை பாதுகாக்க இந்திய தூதரகம் அனேக நாடுகளிலும் உள்ளது. இலங்கையில் மடிந்த நம் சொந்தங்கள் அப்படியாக வாழ்ந்தார்கள்? தங்களிடம் ஆவணம் என காட்ட ஒரு காகிதம் கூட இல்லாத நிலையில் அகதிகளாக திரிந்த நம் மக்களை பதவிக்கு பலி கொடுத்துவிட்டு இப்பொழுது ஏன் இந்த நாடகம் தி.மு.க'விற்கு?

"பசி வந்திட பத்தும் பறந்து போகும்" இது பழமொழி ஆனால் தி.மு.க'விற்கு "பதவி வந்திட பத்தும் பறந்து போகும்".

Similar News