அதிர்ச்சி! வெட்டப்பட இருக்கும் 120 மில்லியன் மரங்கள்! இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையிலாவது மாற்றம் வருமா?

அதிர்ச்சி! வெட்டப்பட இருக்கும் 120 மில்லியன் மரங்கள்! இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையிலாவது மாற்றம் வருமா?

Update: 2020-12-18 06:30 GMT

இது கிறிஸ்துமஸ் மாதம். கிறிஸ்துமசுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. கிறிஸ்து பிறந்த நாளாக கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்கு கிறிஸ்தவர்கள் வீட்டில் குடில் அமைத்து, அலங்கரித்து கிறிஸ்துவை வரவேற்பது வழக்கம். இதில் முக்கிய பங்கு வகிப்பது கிறிஸ்துமஸ் மரம். அழகிய மணிகள், சிறு சிறு அலங்காரப் பொருட்களுடன் மரத்தை அலங்கரித்து பண்டிகை கொண்டாட விரும்பாத கிறிஸ்தவர்களே இருக்க முடியாது.

ஏன் தற்போது இந்து குழந்தைகள் கூட மரத்தை அலங்கரிப்பதால் கிடைக்கும் சந்தோஷத்துக்காகவே கிறிஸ்துமஸ் கொண்டாடத் தொடங்கி உள்ளனர். தீபாவளி, ஹோலி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகளைப் போல் கிறிஸ்துமசும் பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால் மற்ற பண்டிகைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றி குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் போதும், கிறிஸ்துமஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லை.

 

தற்போது குழந்தைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு பெறுகிறார்கள். ஜெர்மன் சிறுமி கிரேட்டா தன்பர்க்கை ரோல் மாடலாக வைத்து பல குழந்தைகள் சமூக செயற்பாட்டாளராகவும் செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் குறைவாகவே உள்ளது.

சராசரியாக ஒரு இயற்கையான 2மீ உயர கிறிஸ்துமஸ் மரத்தை வெட்டுவதால் 16கிலோ கார்பன்டை ஆக்சைடு வாயு வெளியிடப்படுகிறது. இதே உயரத்திலான ஒரு பிளாஸ்டிக் மரத்தால் 40கிலோ கார்பன்டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. அப்படிப் பார்த்தால் வருடத்திற்கு 120 மில்லியன் மரங்கள் வெட்டப்படுகின்றன‌. இவற்றால் 2 முதல் 3 பில்லியன் கிலோ கார்பன்டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது.

 

பிரிட்டன் 8 மில்லியன் மரங்களையும் அமெரிக்கா 35-40 மில்லியன் மரங்களையும் கிறிஸ்துமஸ் சமயத்தில் பயன்படுத்துகின்றன. இந்த இரு நாடுகளோடு இன்னும் சில நாடுகளும் கிறிஸ்துமஸ் மரமாக பயன்படுத்துவதற்கு என்றே தனியாக மரங்களை வளர்க்கின்றன. ஆனால் பெரும்பாலான நாடுகள் ஏற்கனவே இருக்கும் 6-7 வருடங்களான மரங்களையே கிறிஸ்துமஸ் மரமாக பயன்படுத்துகின்றன.

இதனால் தேவையை சமாளிக்க பிளாஸ்டிக் மரங்களைத் தயாரிப்பதும் அதிகரித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகள் 50 மில்லியன், ஆஸ்திரேலியா 5-6 மில்லியன், மற்ற பிற கனடா, ரஷ்யா, சில ஆசிய நாடுகள் இணைந்து 40 மில்லியன் அளவிலான கிறிஸ்துமஸ் மரங்களைப் பயன்படுத்துகின்றன.

மரம் வெட்டுதல் மற்றும் பிளாஸ்டிக் மரங்களால் ஏற்படும்‌ சுற்றுச்சூழல் பாதிப்புகள் போக, காடுகள் அழிவதால் மண்சரிவு, பண்டிகை முடிந்த பின்னர் மரங்கள் எரிக்கப்படுவதால் ஏற்படும் மாசுபாடு என்று பருவநிலை மாற்றத்தை துரிதப்படுத்தவும் இது காரணமாகிறது. மேலும் காட்டு விலங்குகளின் இயற்கை வாழிடங்கள் அழியவும் இது காரணமாகிறது.

இவ்வாறு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மரங்களை வெட்டுவதற்கு ஒரு முடிவு கட்டப்படுமா? இப்போதாவது விழிப்புணர்வு ஏற்பட்டு கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் இந்த கிறிஸ்துமசுக்கு ஒரு‌ மரத்தை வெட்டுவதற்கு பதிலாக நட்டு வைப்பார்களா.?

Source: https://www.thetatva.in/world/120-million-trees-are-cut-down-every-christmas-across-the-world/ 

Similar News