பெருமாள் கையில் வீற்றிருக்கும் ஸ்யாமந்தகமணியின் சிறப்பும் வரலாறும்!
வடிவீஸ்வரத்தில் எழுந்தருளி உள்ள இடர் தீர்த்த பெருமாளின் கையில் இருக்கும் ஸ்யாமகந்தக மணியின் சிறப்பும் வரலாறும் குறித்து காண்போம்.;

பழங்கால கோவில்களில் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு இதிகாச கதையோடு பிணைந்திருக்கும். அதுபோல வடிவீஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள இடர்தீர்த்த பெருமாளும் இதிகாசத்தோடு தொடர்புடையவராகத் திகழ்கிறார். இவ்வாலய பெருமாளின் ஒரு கை கீழ்நோக்கியும் மற்றொரு கை மேல் நோக்கியும் இருக்கிறது. கைவிரல்கள் கீழ்நோக்கி இருக்கும்.கையைப் பார்த்தால் அவரது உள்ளகையில் சிறிய உருண்டை வடிவ பொருள் இருப்பதைக் காணலாம். அது பார்ப்பதற்கு மலர் போன்று தோன்றினாலும் அது ஸ்யாமந்தக மணி ஆகும்.
மகாபாரத காலத்தில் கிருஷ்ண பரமாத்மா மற்றும் அவருடைய அண்ணனின் பலராமர் ஆட்சி செய்து வந்த துவாரகாவில் சத்ரஜித் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு கிருஷ்ணரை பிடிக்காது எனவே கிருஷ்ணரை விட பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சூரிய பகவானை நோக்கி கடும் தவம் புரிந்தார். தவத்தின் பலனாக சத்ரஜித்துக்கு சூரிய பகவானிடம் இருந்து சியாமந்தக மணி கிடைத்தது அந்த சாமந்தகமணிக்கு அபரிமிதமான சக்திகள் உண்டு அது யாரிடம் இருக்கிறதோ அவர் செல்வ செழிப்பு மற்றும் பெயர் புகழோடு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
அப்படிப்பட்ட ஸ்யாமந்தக மணி சத்ரஜித்திடம் இருந்து அவனது தம்பிக்கு கிடைத்தது. சத்ரஜித்தின் தம்பி ஒருமுறை காட்டில் வேட்டையாடச் சென்ற போது அவனை சிங்கம் ஒன்று தாக்கிக் கொன்றது. அவன் கழுத்தில் கிடந்த ஸ்யாமந்தக மணி காட்டிலேயே கிடந்தது. அதை ஜாம்பவான் என்ற கரடி எடுத்துச் சென்று தன் கையில் வைத்திருந்தது.ஆனால் அந்த மணியை கிருஷ்ணர்தான் எடுத்துக் கொண்டார் என்று சத்ரஜித் நினைத்தான். எனவே கிருஷ்ணர் காட்டிற்குச் சென்று அந்த மணியைத் தேடினார். அது ஜாம்பவானிடம் இருப்பது அறிந்து அவருடன் பல ஆண்டுகள் சண்டையிட்டு அதை மீட்டார் என்று மகாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த ஒளி பொருந்திய ஸ்யாமந்தகமணியைத் தான் இத்தல பெருமாள் தன்னுடைய கையில் வைத்திருக்கிறார். ஸ்யாமகந்தக மணி இருக்கும் இடத்தில் நன்மைகளுக்குக் குறை இருக்காது என்று சொல்வார்கள். அதுபோல இடர்தீர்த்த பெருமாளத் தொடர்ந்து தரிசித்து வந்தால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும்.