சதுரங்க விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களா நீங்கள்? அப்போ உடனே இந்த கோவிலுக்கு போங்க!!
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சதுரங்க வல்லப நாதர் மற்ற கோவில்களை காட்டிலும் ஒன்றில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. இக்கோவிலின் வரலாற்றின் படி வாசுதேவன் என்ற மன்னன் குழந்தை வரம் வேண்டி பல சிவாலயங்களுக்கு சென்று இறுதியில் திருநெல்வேலியில் அமைந்திருக்கும் நெல்லையப்பரை முழு பக்தியுடன் பிரார்த்தனை செய்தார்.
அவர் செய்த பிரார்த்தனையில் மகிழ்ந்த இறைவன் பார்வதி தேவியை மகளாகவும் சாமுண்டீஸ்வரியை செவிலியர் ஆகவும் ஆக்கி, சங்குப்பூ வழியாக குழந்தை ஒன்றை வழங்கினார். அந்த குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டு வளர்த்து வந்த நிலையில் அக்குழந்தை பல கலைகளில் மிகவும் தேர்ச்சி வாய்ந்ததாக இருந்தது.
முக்கியமாக சதுரங்கத்தில் யாராலும் அசைக்க முடியாத அளவிற்கு அந்தக் குழந்தை இருந்தது. அதைப் பார்த்து மன்னர் சதுரங்கத்தில் தன் மகளை வென்று காட்டுபவருக்கு அவள் கை கிடைக்கும் என்று அறிவித்தார். அது யாராலும் வெல்ல முடியாத நிலையில் அதன் பிறகு இறைவன் சித்தர் வேடத்தில் தோன்றி வென்று காட்டி அதன் பிறகு தன்னுடைய சுயரூபத்தை காட்டினார்.
அதன் பிறகு இந்த கோவில் சதுரங்க வல்லபநாதர் கோவில் என்று புகழ் பெற்றது. இத்தகைய புகழ்வாய்ந்த இந்த கோவிலுக்கு சதுரங்க விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு சென்றால் அவர்களுக்கு நிச்சயமாக சதுரங்க விளையாட்டில் வெற்றி கிட்டும் என்றும், சதுரங்க விளையாட்டில் பெரிய இடத்திற்கு செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது.