தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரராக BCCIயால் பார்க்கப்படுகிறார் என கூறப்படுகிறது. அதனால் தான் அவருக்கு ஆசிய கோப்பை, ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய T20 தொடர் என்று இந்திய அணியில் இடை விடாமல் விளையாட வாய்ப்பு தேடி வருகிறது என்று BCCI வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் யுவராஜ் சிங்கை யாராலும் மறக்க முடியாது. 2011 உலகக்கோப்பை தொடரில் பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலும் அவர் கை கொடுக்காமல் போயிருந்தால் இந்திய அணியால் உலகக்கோப்பை வென்று இருக்க முடியாது. உலகக்கோப்பை மட்டுமின்றி பல தொடர்களில் யுவராஜ் சிங் தன் ஆல் - ரவுண்டர் திறமையால் இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவி இருக்கிறார்.
தற்போது ரவீந்திர ஜடேஜாவிற்கு 34 வயது ஆகும் நிலையில் அவரால் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் ஆட முடியும். குறிப்பாக T20 அணியில் இருந்து அவரை நிரந்தரமாக நீக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், ஜடேஜா அணியை விட்டு சென்றால், "அடுத்த யுவராஜ் சிங்" என்ற இடத்தை நிரப்ப ஒரு பேட்டிங் திறன் கொண்ட ஸ்பின்னர் அணிக்கு தேவை. அந்த இடத்தை நிரப்பவே வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் அவ்வப்போது வாய்ப்பு பெற்று வருகிறார்.
Input & Image courtesy: News