உலகக் கோப்பை இறுதிப் போட்டி.. முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் பாராட்டு..

Update: 2023-11-17 03:09 GMT
உலகக் கோப்பை இறுதிப் போட்டி.. முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் பாராட்டு..

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மும்பையில் நேற்று நடந்த அரை இறுதி போட்டியில் இந்திய அணி 70 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வெற்றி பெற்று நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெற்றியை கொண்டாட நாடு முழுவதும் ரசிகர்கள் தங்களுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன்னுடைய ஐம்பதாவது சதம் அடித்து புதிய சாதனையை படைத்து இருக்கிறார். ஒருநாள் போட்டியில் தனது 50 ஆவது சதத்தை எட்டிய விராட் கோலி அதிக சதங்கள் அடித்தவரான டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து தற்போது புதிய சாதனையை படைத்திருக்கிறார்.


ICC உலகக் கோப்பை 2023 அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அபார வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இறுதிப் போட்டியில் வெற்றி பெறவும் பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது, இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!


இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அற்புதமான பேட்டிங் மற்றும் சிறந்த பந்துவீச்சு நமது அணிக்கு போட்டியில் வெற்றியை தேடித் தந்தது. இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!" முகமது ஷமியின் அபாரமான ஆட்டத்தையும் பிரதமர் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News