ஒலிம்பிக் வில்வித்தை போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணிகள்!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் தொடங்கும் ஒலிம்பிக் வில்வித்தை அணிகளுக்கான தகுதி சுற்று போட்டியில் இந்திய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

Update: 2024-06-25 08:51 GMT

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அடுத்த மாதம் 26 -ஆம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் வில்வித்தை அணிகளுக்கான தகுதி சுற்று போட்டி மூன்று கட்டமாக நடந்தது. கடந்த ஆண்டு நடந்த முதலாவது தகுதி சுற்றான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி மூலம் தென்கொரியா, துருக்கி, ஜப்பான், ஜெர்மனி, மெக்சிகோ ஆகிய அணிகள் தகுதி கண்டன.

அடுத்து நடந்த கண்டங்களுக்கான தகுதி சுற்றின் வாயிலாக கஜகஸ்தான், கொலம்பியா, இத்தாலி, தென்கொரியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் கடந்த வாரம் நடந்த கடைசி தகுதி சுற்று மூலம் மெக்சிகோ,சீன தைபை, இங்கிலாந்து, சீனா மலேசியா, இங்கிலாந்து, சீன தைபே ஆகிய அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் பிரான்ஸ் இரு பிரிவிலும் நேரடியாக தகுதி பெற்றது.

இந்த நிலையில் நேற்று வெளியிடப்பட்ட உலக வில்வித்தை புதிய தரவரிசையின் அடிப்படையில் ஆண்கள் பிரிவில் இந்தியா மற்றும் சீனாவும் பெண்கள் பிரிவில் இந்தியா மற்றும் இந்தோனேஷியாவும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றன . ஒலிம்பிக் போட்டிக்கு இரு பிரிவிலும் தலா 12 அணிகள் பங்கேற்கும் .தகுதி சுற்றின் அடிப்படையில் 10 அணிகள் முன்னேறிய பிறகு எஞ்சிய இரண்டு இடங்களை நிரப்ப வேண்டி இருந்தது. இதில் தகுதி பெறாத அணிகளின் தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் இரண்டு அணிகளுக்கு வாய்ப்பு வழங்கும் புதிய விதிப்படி இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

இந்த வாய்ப்பின் மூலம் அணிகள் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் என்று எல்லாப் பந்தயங்களிலும் இந்தியா கலந்து கொள்ள முடியும். இந்திய ஆண்கள் அணியில் தருண் தீப் ராய், தீரஜ் பொம்மதேவரா, பிரவீன் ஜாதவ் ஆகியோரும் பெண்கள் அணியில் தீபிகா குமாரி , பஜன் கவுர், அங்கிதா பகத் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர் .இதில் தீபிகா குமாரி மற்றும் தருண் தீப் ராய் நான்காவது முறையாக ஒலிம்பிக்கில் கால் பதிப்பது குறிப்பிடத்தக்கது.


SOURCE :Newspaper 

Tags:    

Similar News