Kathir News
Begin typing your search above and press return to search.

முன்பதிவு முடிந்தும் வெளியாகாத 'மன்மதலீலை' - காரணம் என்ன?

முன்பதிவு முடிந்தும் வெளியாகாத மன்மதலீலை - காரணம் என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  1 April 2022 7:15 AM GMT

இன்று வெளியாகவிருந்த மன்மதலீலை படம் சில காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப்போனது.




இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக்செல்வன் நடித்த படம் 'மன்மதலீலை', ஏப்ரல் 1-ஆம் தேதியாகிய இன்று வெளியாக வேண்டிய 'மன்மதலீலை' படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. 7:45, 8 மணி ஆகிய காட்சிகளுக்கான முன்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் 8:00 காட்சியை பார்க்க வந்த ரசிகர்களுக்கு பட வெளியீடு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு மட்டும் தரப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.




மேலும் இதுகுறித்து விசாரித்த பொழுது 'மன்மதலீலை' படத்தை பொருத்தவரை தயாரிப்பாளர் வெங்கட் பிரபுவுக்கும், படத்தை வாங்கியவருக்கும் 4 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை செட்டில் செய்யும் பணவிஷயத்தில் சமரசம் ஏற்படாத காரணத்தினால் படத்தின் வெளியீடு தள்ளிப் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்தால் மட்டுமே படம் வெளியாகும் எனவும் தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News