உ.பி.யில் பா.ஜ.க சர்ச் நன்கொடை பணத்திற்கு 6% ஜிஎஸ்டி விதித்ததா? பரவி வரும் செய்தியின் உண்மை என்ன?
உத்தர பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி சர்ச் நன்கொடை பணத்திற்கு ஆறு சதவீதம் ஜி.எஸ்.டி விதித்ததாக பரவி வரும் செய்தி உண்மையா?
By : Bharathi Latha
ஆறு சதவீதம் ஜி.எஸ்.டி விதித்ததா?
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் பகிரப்பட்ட அதிகமாக வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆளும் அரசாங்கம் அங்கு உள்ள தேவாலயங்களில் நன்கொடை தருபவர்கள் பணத்திற்கு ஆறு சதவீத ஜிஎஸ்டி விதித்ததாக சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் ஸ்கிரீன்ஷாட் ஒன்று அதிகமாக பகிரப்பட்டது. இது உண்மையா? என்பது குறித்து தற்போது தெளிவு கிடைத்துள்ளது.
மார்பிங் செய்யப்பட்ட தவறான செய்தி:
ஆனால் உண்மை என்னவென்றால் அது போலியானது. இந்த வைரலான புகைப்படத்தின் முழுப் பக்க தலைப்பு திருத்தப் பட்டிருப்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். 11 ஜனவரி 2010 அன்று வெளியிடப்பட்ட அசல் பதிப்பு, GST அறிமுகப்படுத்தப் படுவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முந்தையது. 2019 டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தி ஒன்றை எடுத்து, அதை மார்பிங் செய்து இதுபோன்ற தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2010 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப் படவில்லை என்பதும் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம்.
இந்த தலைப்பு உத்தரபிரதேச தேவாலயங்களுக்கான ஜி.எஸ்.டி பற்றி விவாதிக்கிறது. ஆனால் அதில் அடுத்து கீழே உள்ள மற்றொரு செய்தியில், பிரதமராக இருந்து கர்நாடகாவை சேர்ந்த அரசியல்வாதியான எச்.டி தேவகவுடாவின் புகைப்படம் உள்ளது. எனவே இது 2010 ஆம் ஆண்டு காலகட்டத்தை சேர்ந்த ஒரு செய்தி கிளிப்பிங என்பது தெரிய வந்தது. 11 ஜனவரி 2010 அன்று வெளியிடப்பட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் கிளிப்பிங்கின் மார்பிங் செய்யப்பட்ட ஸ்கிரீன்ஷாட் பகிரப்படுகிறது.
Input & Image courtesy: The Quint News