Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டமன்ற வளாகத்தில் காலிஸ்தான் கொடி - விசாரணைக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர்!

சட்டமன்ற வளாகத்தில் காலிஸ்தான் கொடி - விசாரணைக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர்!

ThangaveluBy : Thangavelu

  |  9 May 2022 6:32 AM GMT

இமாசல பிரதேச சட்டசபை வாசலில் தடை செய்யப்பட்ட அமைப்பான காலிஸ்தான் தீவிரவாதிகளின் கொடி பறக்க விடப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு முதலமைச்சர் ஜெய்ராம் ராம் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்.

சமீப நாட்களாக பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேச மாநிலங்களில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவ்வப்போது வெளியில் தலை காட்டத்தொடங்கியுள்ளனர். இவர்களை இரும்புக்கரம் கொண்டு காவல்துறை அடக்கி வருகிறது. சில இடங்களில் அவர்களின் கொடியை ரகசியாக பறக்கவிட்டும் வருகின்றனர். அதே போன்ற சம்பவம் தற்போது இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

இமாச்சல பிரதேச மாநில சட்டசபை கட்டிடத்தின் பிரதான வாயிலில் தடை செய்யப்பட்ட சீக்கியர் பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் இயக்கத்தின் கொடிகள் கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி சட்டசபை கட்டிட சுவரில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களும் எழுதப்பட்டது. இதனையடுத்து அம்மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக சுவற்றில் எழுதப்பட்ட கோஷங்களை போலீசார் அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News