Begin typing your search above and press return to search.
பஞ்சாபில் துயரம்: சக ஊழியர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

By :
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரை அருகே உள்ள காசா பகுதியில் அமைந்திருக்கும் எல்லை பாதுகாப்பு படையினர் குழுவில் திடீரென்று ஒருவருக்கு ஒருவர் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசா பகுதி எல்லைப் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் ஒருவர் திடீரென்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 எல்லை பாதுகாப்பு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் ஒருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது பற்றி பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். கான்ஸ்டபிள் சட்டெப்பா எஸ்.கே. நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
Source: Daily Thanthi
Image Courtesy: Telegraph India
Next Story