Kathir News
Begin typing your search above and press return to search.

43 மணி நேரம் உணவின்றி மலை இடுக்கில் சிக்கித் தவித்த இளைஞர் மீட்பு: முத்தமிட்டு ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்த இளைஞர்!

கேரளாவில் மலை இடுக்கில் தவறி விழுந்த இளைஞரை 43 மணி நேரத்திற்கு பின்பு இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

43 மணி நேரம் உணவின்றி மலை இடுக்கில் சிக்கித் தவித்த இளைஞர் மீட்பு: முத்தமிட்டு ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்த இளைஞர்!

ThangaveluBy : Thangavelu

  |  9 Feb 2022 7:51 AM GMT

கேரளாவில் மலை இடுக்கில் தவறி விழுந்த இளைஞரை 43 மணி நேரத்திற்கு பின்பு இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் பாபு 28, இவரும் மற்ற நண்பர்களும் கடந்த 7ம் தேதி மலப்புழைக்கு சென்றுள்ளனர். அப்போது அடர்ந்த வனப்பகுதியில் மலையேறியுள்ளனர். மதியம் நேரத்தில் பாபு மலையில் இருந்து இறங்கி வந்தபோது, தவறுதலாக பள்ளமான இடத்தில் அமைந்துள்ள பாறை இடுக்குகளில் மாட்டிக்கொண்டார். அவருடன் சென்ற நண்பர்களால் அவரை மீட்க முடியவில்லை. இதனால் அவர்கள் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து மலம்புழை வனத்துறைக்கு நடந்த சம்பவம் தொடர்பாக தகவல் அளித்துள்ளனர். தகவலை தொடர்ந்து மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் பாபு இருக்கின்ற இடத்தினை அந்த குழுவால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலமாக தேடும் பணி நடைபெற்றது. மிக நீண்ட நேரத்திற்கு பின்னர் இளைஞர் பாபு மாட்டிக்கொண்டுள்ள இடம் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த தகவலை கடற்படை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் சென்று இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் செயல் தோல்வியில் முடிந்தது. இதன் பின்னர் இந்திய ராணுவத்திற்கு கேரள அரசு தகவல் அளித்தது.

அதன்படி பெங்களூரு மற்றும் வெலிங்டன் பகுதியில் இருந்து மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கடந்த 48 மணி நேரமாக மலை இடுக்கில் உணவின்றி சிக்கித்தவித்த இளைஞரை நெருங்கினர். அந்த இளைஞரை ஊக்கப்படுத்தும் விதமாக குடிநீர் மற்றும் உணவு வழங்கினர். அதன் பின்னர் அவரை கீழே கொண்டு வரும் பணியில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டனர். ஒரு வழியாக இளைஞரை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராணுவ வீரர்களுக்கு முத்தம் கொடுத்து இளைஞர் பாபு நன்றியை தெரிவித்தார். உயிருடன் இளைஞரை மீட்ட இந்திய ராணுவத்தினருக்கு கேரள மக்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த மக்களும் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

Source: Daily Thanthi

Image Courtesy: ANI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News