பிரதமர் பெற்ற பரிசு பொருட்கள் ஏலம் - கங்கையை தூய்மை செய்யும் பணிக்கு பணம் பயன்படும்!
பிரதமர் மோடி அவர்கள் பரிசாக பெற்ற பொருட்களின் ஏலம் 17ஆம் தேதி தொடங்குகிறது.
By : Bharathi Latha
பிரதமர் மோடி பெற்ற 1200க்கும் மேற்பட்ட பரிசு பொருட்கள் 17ஆம் தேதி முதல் ஏலம் விடப்படுகின்றது இதில் கிடைக்கும் பணம் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் பிரதமர் மோடியை சந்திக்கும் முதல் மந்திரிகள் அமைச்சர்கள் அரசியல் தலைவர்கள் பல்வேறு துறை பிரபலங்கள் பரிசு பொருட்களை வழங்குவது வழக்கம். அந்த பரிசு பொருட்கள் அவ்வப்போது ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகிறது ஏற்கனவே மூணு தடவை ஆன்லைன் மூலம் ஏலம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நான்காவது நிலவையாக வருகின்ற 17ஆம் தேதி ஏலம் தொடங்குகிறது. 1200க்கும் மேற்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் இந்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பிரத்தேகமாக இணையதளம் ஒன்றின் வழியாக ஏலம் நடக்கிறது. அக்டோபர் இரண்டாம் தேதியுடன் ஏலம் நிறைவடைகிறது. பரிசு பொருட்களின் ஆரம்ப விலை 100 முதல் 10 லட்சம் வரை இருக்கிறது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இப்பொருட்களின் சாமானியர் ஒருவர் அளித்த பரிசு பொருட்களும் இருக்கின்றன. நாட்டின் வளமான கலாச்சாரம் பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிக்க கூடியதாக பரிசு பொருட்கள் உள்ளன. மத்திய மாநில மந்திரி சிவராஜ் சிங் பரிசளித்த ராணி கமலா பாதி சிலை, உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பரிசளித்த அனுமான் சிலை மற்றும் சூரியன் ஓவியம், இமாச்சல் பிரதேச முதல்வர் ஜெயராம் தாகூர் பரிசளித்த திரிசூலம், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பரிசளித்த மகாலட்சுமி கடவுள் சிலை ஆகிய பல பரிசுப் பொருட்களும் இதில் அடங்கும்.
Input & Image courtesy: India Today News