Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கையில் 10,000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள், உணவு கொடுத்து ஆர்.எஸ்.எஸ் உதவி - சத்தமில்லாமல் நிகழ்ந்த காரியம்

இலங்கையை சேர்ந்த பத்தாயிரம் குடும்பங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் உதவி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் 10,000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள், உணவு கொடுத்து ஆர்.எஸ்.எஸ் உதவி - சத்தமில்லாமல் நிகழ்ந்த காரியம்

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Oct 2022 2:09 AM GMT

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்ட வருகின்றன.அந்த வகையில் தற்பொழுது சேவா இன்டர்நேஷனல் என்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டு நிறுவனம் மூலமாக 10,000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் தற்போது வழங்கப்பட்டு உள்ளது. உள்நாட்டு கூறினால் பாதிக்கப்பட்ட இடங்கள் 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு மெல்ல மெல்ல வளர தொடங்கியது. பொருளாதார வளர்ச்சியும் சிறிது சிறிதாக மலர்ந்தது.


2020 ஆம் ஆண்டிற்கு பிறகு கொரோனா நோய் தொற்று காரணமாக பொருளாதார மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை எக்கு, தப்பில் உயர்த்தியது. இதன் காரணமாக அன்றாட உழைக்கும் மக்கள் நிலைமை மிகவும் மோசமானது. பொருட்களின் விலை உயர்வு காரணமாக அதிபர் மாளிகைக் குழு நுழைந்த பொது மக்கள் பொருட்களை சூறையாடும் ஒரு நிலைமையும் அங்கு ஏற்பட்டது.


இதன் காரணமாக நுவரெலியா, கண்டி ஆகிய தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவில் பொருளாதாரப் பிரச்சினை தலைதூக்கியது. எனவே இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு உதவி செய்யும் வகையில் பாதிக்கப்பட்ட தமிழர்களை கண்டறிந்து, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆர்எஸ்எஸ் தொண்டு நிறுவனம் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்கி உதவி செய்து வருகின்றது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டு நிறுவனமான சேவா இன்டர்நேஷனல் என்று அமைப்பின் மூலமாக, அங்குள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 10 ஆயிரம் குடும்பங்களுக்கு மாதம் 25 கிலோ அரிசி மற்றும் 25 கிலோ மாவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றது என்றும் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி விஜயபாலன் கூறுகிறார்.

Input & Image courtesy:



Next Story
கதிர் தொகுப்பு
Trending News