மாணவர்களை ' ஜெய்பீம்' கோஷம் போட சொல்லி கட்டாயப்படுத்தும் பள்ளி- பெற்றோர்கள் புகார் !
By : Saffron Mom
ஆக்ராவில் உள்ள மா பைகுந்திதேவி சர்வோதயா இன்டர் காலேஜ் மீது பல பெற்றோர்கள் புகார் அளிக்கும்படி நேரிட்டுள்ளது. 'அம்பேத்கரிஸம்' என்ற பெயரில் மத ரீதியிலான பாகுபாடு காட்டுவது இங்கு வாடிக்கையாகியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இளம் வயதினரை மூளைச்சலவை செய்யும் பகுதியில் பகுதியாக 'நெற்றியில் திலகங்கள்' அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்து மதத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்புவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்து குழந்தைகள் பூணூல் அணிய கூடாது, கையில் கயிறு கட்ட கூடாது என்றெல்லாம் விதிமுறைகள் இருக்கின்றன.
இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்களை, இந்து மதத்தைப் பின்பற்றக் கூடாது என்று வெளிப்படையாகவே ஊக்குவிக்கின்றனர் பள்ளி வளாகத்தில் 'ஜெய்பிம்' என்ற கோஷங்களை எழுப்ப தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குழந்தைகளின் வகுப்பறை கரும்பலகைகளில் அம்பேத்கர் மற்றும் ப்ஹுலே ஆகியோரின் இந்து எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இந்த கல்வி நிலையம் பகுஜன் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஒரு முன்னாள் கவுன்சிலர் ஷியாம் பிரகாஷ் போதி என்பவரால் நடத்தப்படுகிறது. இவரை சுற்றி பல சர்ச்சைகளின் வரலாறு இருக்கிறது. தற்பொழுது சில வருடங்களாக இந்த பள்ளிதனம் சொந்தமாக இயங்கி வருகிறது. என்பது மத்திய அரசால் நிதியுதவி செய்யப்படும் இத்தகைய பள்ளிகள் பெரும்பாலும் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கின்றன.
இந்துக்களுக்கு எதிரான வாசகங்கள் சுவர்கள் முழுவதும் கிறுக்கப்பட்டுள்ளன. 'அம்பேத்கரிசத்திற்கு' மாணவர்களை மாற்றுவதற்கு இந்து கோவில்கள் மீதான வெறுப்பு வளர்க்கப்படுகிறது. கோவில்களுக்குச் செல்வது 'மன அடிமைத்தனத்தை' போன்றது என்பதை போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்து மதம் மூடநம்பிக்கை மற்றும் பாசாங்கை வெளிப்படுத்துவதாகவும் உள்ளன என்று கூறுகின்றனர்.
இத்தகைய விஷயங்களை ஆதாரங்களுடன் பவான் சமாரியா என்ற ஒரு மாணவரின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பள்ளியில் புகார் அளித்தால், பள்ளியிலிருந்து வெளியேற்றி விடுவோம் என என்று தாங்கள் மிரட்டப்படுவதாக கூறுகிறார்கள். இதுவரை அமைதியாக இருந்த பெற்றோர்கள் இனிமேல் இந்த மன துன்புறுத்தலை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தற்பொழுது புகார் அளித்துள்ளனர்.
இந்து அமைப்புகளும் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துள்ளன. இதுதொடர்பான ஆதாரங்களும் புகைப்படங்களும் வழங்கப்பட்டுள்ளன. இப்படி வெளிப்படையான இந்து மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மீது நடவடிக்கை இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி தேவேந்திர சங்கர் பாண்டே இது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார். ஆதாரங்கள் நிறைய இருந்தாலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் எந்த அடிப்படையும் இல்லை என்றும் அனைத்து மதத்தினருக்கும் சமமாக மரியாதை செய்ய கற்றுத்தர படுவதாகவும் பள்ளி அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
With Inputs From: Hindu Post