Kathir News
Begin typing your search above and press return to search.

வளர்ச்சியை விரும்பும் 44 தனித்துவிடப்பட்ட மாவட்டங்களுக்கு 4ஜி செல்போன் சேவை : இதுவரை எந்த அரசும் மேற்கொள்ளாத முயற்சி!

USOF scheme for provision of mobile services in Uncovered Villages of Aspirational Districts

வளர்ச்சியை விரும்பும் 44 தனித்துவிடப்பட்ட மாவட்டங்களுக்கு 4ஜி செல்போன் சேவை : இதுவரை எந்த அரசும் மேற்கொள்ளாத முயற்சி!

MuruganandhamBy : Muruganandham

  |  19 Nov 2021 5:04 PM GMT

ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா & ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு உட்பட்ட வளர்ச்சியை விரும்பும் மாவட்டங்களில் இதுவரை செல்போன் சேவை கிடைக்கப் பெறாத கிராமங்களுக்கு அந்த சேவையை வழங்க, உலகளாவிய சேவை நிதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த திட்டம் ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா மற்றும் ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு உட்பட்ட வளர்ச்சியை விரும்பும் மாவட்டங்களில் உள்ள 7,287 கிராமங்களுக்கு 4ஜி செல்போன் சேவை வழங்க, ஐந்தாண்டுகளுக்கான செயல்பாட்டு செலவு உட்பட ரூ.6,466 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவரை சேவை கிடைக்கப்பெறாத கிராமங்களில் 4ஜி செல்போன் சேவை வழங்குவதற்கான பணிகள், திறந்தவெளி போட்டி மூலம், உலகளாவிய சேவை உதவி நிதியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படவுள்ளது.

ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள வளர்ச்சியை விரும்பும் மாவட்டங்களுக்கு உட்பட்ட தொலைதூர மற்றும் சேவை கிடைக்கப்பெறாத சிக்கலான கிராமங்களில் செல்போன் சேவை வழங்குவதற்கான இந்த புதிய திட்டம், தற்சார்புக்கான டிஜிட்டல் இணைப்பு வசதியை மேம்படுத்த உதவும்.

கல்வி கற்கவும், தகவல்கள் மற்றும் அறிவாற்றலை வெளிப்படுத்தவும், திறன் மேம்பாடு, பேரிடர் மேலாண்மை, மின்னணு ஆளுகை முயற்சிகள், புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கும், மின்னணு வர்த்தகத்திற்கும் உதவிகரமாக அமையும்.

மேலும் கல்வி நிறுவனங்கள் அறிவாற்றலை பகிர்ந்து கொள்ளவும், வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றி, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, தற்சார்பு இந்தியாவின் குறிக்கோள்களை நிறைவேற்றவும் உதவிகரமாக இருக்கும்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News