வளர்ச்சியடைந்த பாரதம்@2047 தொலைநோக்கு: மோடி அரசின் லட்சியம்..
By : Bharathi Latha
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ஐ.எம்.சி-இளம் தலைவர்கள் அமைப்பின் இளைஞர் மாநாட்டின் 4 வது பதிப்பை இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். தொடக்க அமர்வின் போது பார்வையாளர்களிடையே உரையாற்றிய அவர், நாடு 100-வது சுதந்திரத்தின் விளிம்பில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய அரசு இந்தியாவை எதிர்காலத்தில் சாத்தியமுள்ள ஒரு வல்லரசாக்குவதை நோக்கமாகக் கொண்டு, இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கும் 'வளர்ச்சியடைந்த பாரதம் @2047 தொலைநோக்கு ' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றிய அமைச்சர் தாக்கூர், "இளைஞர்கள் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை இயக்குபவர்கள், சுறுசுறுப்பாக இருங்கள், வாய்ப்புகளில் செயல்படுங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க புதிய தொழில்நுட்பங்களை மேற்கொள்ளுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். நாட்டின் வளர்ச்சியில், இளைஞர்களின் பங்கை எடுத்துரைத்த அமைச்சர், காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு 2023 இன் படி, 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 41% ஆக உள்ள 547 மில்லியன் தொழிலாளர்களைக் கொண்ட இந்தியாவின் இணையற்ற திறனைப் பற்றிக் குறிப்பிட்டார். 1.4 பில்லியன் இந்தியர்களில், சுமார் 100 கோடி பேர் இன்று 35 வயதுக்குட்பட்டவர்கள். 2047 ஆம் ஆண்டில், உலகளாவிய பணியாளர்களில் 21% பேர் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டிருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இளைஞர்கள் எதிர்காலத்தின் சிற்பிகள் மட்டுமல்ல, நாட்டின் விருப்பங்கள், கொள்கைகள் மற்றும் விதியின் பாதுகாவலர்களும் தான் என்று தாக்கூர் வலியுறுத்தினார்.
'வளர்ச்சியடைந்த பாரதம் 2024' பற்றி விவாதித்த அமைச்சர், இணையத்தில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியாவின் நிலையை குறிப்பிட்டார், ஒவ்வொரு நிமிடமும் மூன்று இந்தியர்கள் இதில் இணைகின்றனர், அவர்களில் இருவர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். 2024-ம் ஆண்டுக்குள் உலகின் நடுத்தர வர்க்கத்தினரில் 20 சதவீதம் பேர் இந்தியாவில் வசிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறிய திரு தாக்கூர், இளம் தொழில்முனைவோர் வீட்டுவசதி, கல்வி, உள்கட்டமைப்பு, குடிநீர், உணவு, சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற துறைகளில் புதுமைகளை புகுத்தி சாதகமாக அதிர்வலைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை 17 ஆயிரம் புத்தொழில் நிறுவனங்களை அங்கீகரித்துள்ளதாகவும், கடந்த பத்தாண்டுகளில் 1.3 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Input & Image courtesy: News