6 மணி நேரத்தில் 52 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஜுக்கர்பர்க் ! ஏன் தெரியுமா ???
பேஸ்புக் மற்றும் அதன் குழுமத்தில் உள்ள இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் நிறுவனங்களின் சேவைகள் சுமார் 6 மணி நேரம் முடங்கியதால் அதன் தலைவர் மார்க் ஜக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. இதன் காரணமாக உலக பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
By : Thangavelu

நேற்று இரவு முதல் சுமார் 6 மணி நேரத்திற்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் சேவைகள் உலகம் முழுவதும் முடங்கியது. இதன் காரணமாக 100 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் சேவைகள் பெற முடியாமல் அவதியுற்று வந்தனர். இந்த கோளாறுகள் சுமார் 6 மணி நேரத்திற்கு பின்னர் சரி செய்யப்பட்டு அதிகாலை 4 மணியளவில் மீண்டும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் சேவைகள் இயங்கத் தொடங்கியது.
இதனிடையே சில மணி நேர பாப்புகளுக்கு பேஸ்புக் தலைவர் ஜக்கர்பர்க்கை மிகக் கடுமையான பாதிப்பை சந்திதுள்ளார். பங்குச்சந்தைகளில் பேஸ்புக் பங்குகள் மதிப்பு சரிந்ததால் ஐக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு சுமார் 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. இதனால் அவர் உலக பணக்காரர்கள் வரிசையில் 3வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
Source: Puthiyathalamurai
Image Courtesy:Britannica